மதுரை கைதியின் மனிதநேயம்: மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவி: தினமலர் செய்தியால் கரிசனம்

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
மதுரை: நாகையைச் சேர்ந்த உயரம் குறைந்த மாற்றுத் திறனாளி மாணவியின் குடும்ப வறுமை குறித்த செய்தி தினமலர்நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, அம்மாணவிக்கு மதுரை சிறை கைதி இளங்குமரன் 10 ஆயிரம் ரூபாய்வழங்கினார்.நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா மேக்கிரிமங்கலம் பழனிசாமி. இவரது மனைவி தேவகி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் பாரதி 18, உடல்
மதுரை கைதி, மனிதநேயம், மாற்றுத்திறனாளி மாணவி,  தினமலர், செய்தியால் கரிசனம்

மதுரை: நாகையைச் சேர்ந்த உயரம் குறைந்த மாற்றுத் திறனாளி மாணவியின் குடும்ப வறுமை குறித்த செய்தி தினமலர்நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, அம்மாணவிக்கு மதுரை சிறை கைதி இளங்குமரன் 10 ஆயிரம் ரூபாய்வழங்கினார்.நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா மேக்கிரிமங்கலம் பழனிசாமி. இவரது மனைவி தேவகி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் பாரதி 18, உடல் வளர்ச்சி குன்றி 2.5 அடி உயரத்திற்கும் குறைவாக உள்ளார். இவர் மயிலாடுதுறை அரசு ஞானாம்பிகை மகளிர் கலைக் கல்லுாரியில், பி.ஏ., படிக்கிறார். மகளின் கல்வி தடை படக்கூடாது என்பதற்காக தேவகி வேலைக்கு செல்வதை தவிர்த்துவிட்டார். பஸ்சில் 18 கி.மீ., துாரத்திலுள்ள மயிலாடுதுறை கல்லுாரிக்கு பாரதியை அழைத்துச் சென்று வருகிறார்.

கலை நிகழ்ச்சிகளில் பரிசுகள் பல பெற்றுள்ள பாரதி, 'படித்து வேலைக்கு செல்வதே லட்சியம்' என்றார். உதவ விரும்புவோர் 87605 45789 ல்தொடர்பு கொள்ளலாம் என மார்ச் 3 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணியைச் சேர்ந்தவர் இளங்குமரன் 55. ஆயுள் தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவர் சிறையில் செய்யும் வேலைக்கு கூலி வழங்கப்படுகிறது. அவர் சார்பில் வழக்கறிஞர்கள் லட்சுமி, சுமதி ஆகியோர் பாரதியிடம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-201919:04:55 IST Report Abuse
ருத்ரா இவ்வளவு மனித நேயம் மிக்க இவர் சிறைப் பறவையா? பாராட்டுக்கள். தினமலர் இவர்களைப் போன்றவருக்கு செய்தி வெளியிட்டு, தனித்தன்மையுடன் திகழ்வது மகிழ்ச்சி.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201910:22:30 IST Report Abuse
Srinivasan Kannaiya கல்லுக்குள்ளும் ஈரம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-201907:16:39 IST Report Abuse
Bhaskaran மனிதநேயருக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X