இன்னவோட்டர் விசா; தொழில் துவங்கலாம் லேசா!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இன்னவோட்டர் விசா'; தொழில் துவங்கலாம் லேசா!

Added : ஏப் 21, 2019
Share
உலகெங்கும், 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் பெருகி வருகின்றன. தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை உலகறிய செய்ய வேண்டும் என்பதில், இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பெரும்பாலான நாடுகள், 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகளை ஆதரிக்கின்றன.தங்கள் நாட்டில், தொழில் முயற்சிகளை மேற்கொள்ள, கம்பெனிகளை துவக்குமாறு, பல நாடுகள், பல சலுகைகள் அறிவித்து அழைக்கின்றன.சிங்கப்பூர், இதில்

உலகெங்கும், 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் பெருகி வருகின்றன. தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை உலகறிய செய்ய வேண்டும் என்பதில், இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பெரும்பாலான நாடுகள், 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகளை ஆதரிக்கின்றன.தங்கள் நாட்டில், தொழில் முயற்சிகளை மேற்கொள்ள, கம்பெனிகளை துவக்குமாறு, பல நாடுகள், பல சலுகைகள் அறிவித்து அழைக்கின்றன.சிங்கப்பூர், இதில் முன்னணியில் உள்ளது. தற்போது இங்கிலாந்தும், 'இன்னவோட்டர் விசா' என்ற பெயரில், புதிய கண்டுபிடிப்பாளர்களை, தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.உங்களுடைய வியாபார யோசனையை, இங்கிலாந்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனம், அங்கீகரிக்க வேண்டும். குறைந்தபட்சம், 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங் (ஏறத்தாழ, 45 கோடி ரூபாய்) உங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.தேவையென்றால், குடும்பத்தையும், கூட்டி செல்லலாம். நீங்கள் விண்ணப்பித்த மூன்று வாரத்தில், உங்களுடைய விசா அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா? மறுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை தெரியப்படுத்துவர். அங்கீகரிக்கப்பட்டு இருந்தால், செல்லும் ஒவ்வொரு நபருக்கும், நீங்கள், 1021 பவுண்ட் ஸ்டெர்லிங் பணம் கட்ட வேண்டும்.இந்த விசாவை வைத்து, அங்கு நீங்கள் மூன்று ஆண்டுகள் தங்கலாம். தேவையெனில் மீண்டும், 3 ஆண்டுக்கு, விசாவை நீட்டிக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாபாரத்தை துவங்கலாம். ஆனால், இந்த விசாவில் சென்றுவிட்டு, அங்கு வேறு கம்பெனியில் வேலை செய்ய இயலாது. விபரங்களுக்கு https://www.gov.uk/innovator-visa. சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com, அலைபேசி: 98204-51259 -சேதுராமன் சாத்தப்பன் -
ஷாப் கிரானாஇந்தியாவில், ஒரு கோடியே 80 லட்சம், 'ரீடெய்ல்' கடைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, 42 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. இந்த கடைகளில், இந்தியாவில் முக்கியமான ஊர்களில் உள்ள, 9 லட்சம் ரீடெய்ல் கடைகளை (கிரானா ஸ்டோர்களை), தங்களது பர்சேஸ் தேவைகளுக்கு நேரடியாக உற்பத்தியாளர்களுடன் இணைப்பதுதான் இவர்களது வேலை.இதனால், சரக்குகள், மொத்த விலை கிடைக்க உதவுகிறது. நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து சப்ளை செய்யப்படுகிறது. தேவையான 'ஸ்டாக் ஆர்டர்' செய்த, 24 மணி நேரத்தில் கிடைக்க வழி செய்கிறது.இந்துாரில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனி, அப்பகுதியிலுள்ள 'ரீடெய்ல்' கடைகளை உற்பத்தியாளர்களுடன் இணைக்க உதவியது. பின், மும்பைக்கும் தனது பணிகளை விரிவாக்கம் செய்தது. தற்போது, இந்தியாவில் பல நகரங்களில் தனது சேவையை விரிவு செய்துள்ளது. ஆண்டு விற்பனையை பொறுத்து, வங்கிகள் வாயிலாக கடன் பெற உதவுகிறது.மொத்தமாக எதற்கு உதவுகிறது என்றால், உங்களுடைய 'கிரானா ஷாப்', பெரிய கடைகளுடன் போட்டி போட உதவுகிறது. இதற்கான இணைய தளம்: www.shopkirana.com.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X