பொது செய்தி

தமிழ்நாடு

சக்தி தரும்... வெற்றி யுத்தி!

Added : ஏப் 21, 2019
Share
Advertisement
-எல். உமாசங்கர்-கல்லுாரி நுழைவு தேர்வில், கணிதத்தில், 120 மதிப்பெண்ணுக்கு, ஒரு மதிப்பெண் மட்டுமே எடுத்தவர் இவர். கல்வியில் சிறந்த மாணவராக இருக்கவில்லை. ஆரம்ப பள்ளித்தேர்விலேயே, இரண்டு முறை தோல்வி. நடுநிலைப்பள்ளித் தேர்வில், மூன்று முறை தோல்வி. கல்லுாரி நுழைவுத்தேர்வில், போராடி தான் பட்டம்.கல்வி கற்றலில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தவர் இவர். இருப்பினும், அவர் தனக்கு

-எல். உமாசங்கர்-கல்லுாரி நுழைவு தேர்வில், கணிதத்தில், 120 மதிப்பெண்ணுக்கு, ஒரு மதிப்பெண் மட்டுமே எடுத்தவர் இவர். கல்வியில் சிறந்த மாணவராக இருக்கவில்லை. ஆரம்ப பள்ளித்தேர்விலேயே, இரண்டு முறை தோல்வி. நடுநிலைப்பள்ளித் தேர்வில், மூன்று முறை தோல்வி. கல்லுாரி நுழைவுத்தேர்வில், போராடி தான் பட்டம்.கல்வி கற்றலில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தவர் இவர். இருப்பினும், அவர் தனக்கு தீவிர ஆர்வமிருக்கும் விஷயங்களில், சிறந்து விளங்கினார். உதாரணத்துக்கு, ஆங்கிலத்தை கற்றுக் கொண்டிருந்தார். இறுதியில் மிகப்பெரிய அளவிலான வெற்றி.“நீங்கள் ஒருபோதும் முயற்சி யே எடுக்கவில்லையென்றால், வாய்ப்புகளே இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று சொன்னவர். இவர் தான் ஜாக்மா.தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரர்ஜாக்மா. உலகின் மிக வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவர். 'அலிபாபா' நிறுவனத்தை துவங்கியவர் மற்றும் அதன் நிர்வாக தலைவர். சீனாவின் மிகப்பெரிய பணக்காரர். உலகின், 22வது மிகவும் சக்தி வாய்ந்த மனிதர், 2016ம் ஆண்டில், உலகின், 33வது கோடீஸ்வரர். சீனாவின், 80 சதவீத ஆன்லைன் விற்பனை 'அலிபாபா' குழுமம் வாயிலாக நடக்கிறது.
வருமானத்தின் அடிப்படையில், அலிபாபா, உலகின் ஆறாவது மிகப்பெரிய இணையதளம்.உலகின் மிக வெற்றிகரமான தொழிலதிபர் ஆவதற்கு முன், பல தோல்விகளையும், புறக்கணிப்புகளையும் சந்தித்து தான், இன்று சீனாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார். இவர், தன்னம்பிக்கைக்கு ஆகச்சிறந்த ஒரு இலக்கணம்.என்ன ரகசியம்ஒருமுறை, உலகின் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லரிடம், தங்களின் முன்னேற்றத்தின் ரகசியம் என்னவென்று கேட்டபோது, அவர் சொன்ன பதில், 'கடுமையான உழைப்பு' என்பது தான். வெற்றியை உருவாக்குவதில், உழைப்பு மிகப்பெரிய மூலதனம். அறிவு சார்ந்த உழைப்பானது முடியாது என்பதைக்கூட, நம் கைப்பிடியில் கொண்டு வந்து சேர்க்கும்.தோல்வி இல்லாமல், வெற்றி சாத்தியமாவதில்லை. அறிவுப்பூர்வமாக முயற்சித்தும், தோல்வி ஏற்பட்டால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அதேசமயம், தேவையில்லாத செயல்பாடுகள், தோல்விக்கான அடித்தளமானால், அதற்கு அறியாமைதான் காரணமாக இருக்க முடியும்.தொழில் முனைவோர் பெரும்பாலானோர், பின்னடைவை சந்திப்பதற்கு முதல் காரணம், வர்த்தகச் சந்தை இல்லாமல், வர்த்தகத்தை துவக்குவதே.
வாடிக்கையாளர்கள் தான் இன்றியமையாதவர்கள் என்று சொல்வதை விட, அவர்கள்தான் எல்லாம் என்றால் மிகையல்ல.வியாபார யுக்திவாடிக்கையாளர்களுக்கான தேவைகளை கண்டறிவது புதிய யுக்தி. எந்த பொருளை பயன்படுத்துவது என்பதை, வாடிக்கையாளர்கள் தான் முடிவு செய்கின்றனர். ஆனால், அதே நபரை, புதிய பொருளையும் பயன்படுத்த வைக்க முடியும். அதற்கு, அந்தப் புதிய பொருள், அவருக்கு ஏதோ ஒரு வகையில், இன்றியமையாததாக அமைய வேண்டும்.இந்தியாவில் மொபைல் போன் வருவதற்கு முன், பேஜர்கள் இருந்தன. அதில் அவசரத் தகவல்களை அனுப்பலாம்.
அதில் மெசேஜ் போல டைப் செய்து, தகவலை தெரிவிக்க முடியும். ஆனால், அதில் எந்த வாக்கியம் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் தெரியுமா? 'உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்' என்பதே அது. இதுவே, நவீன தகவல் தொடர்பு சாதனமாக அன்று அறியப்பட்டது. ஏன், இதன் மூலம் கூட வர்த்தகப் பயன்கள் கிட்டின. மொபைல் போன்கள் களமிறங்கியவுடன், பேஜர்கள் மாயமான இடம் தெரியவில்லை.கனவுத்திட்டம்சந்தை என்பது, அனைத்து பொருட்களுக்கான தேவையையும் உருவாக்கும். தொழில் முனைவோரின் கனவுத் திட்டங்கள், இங்குதான் விரிவடைகின்றன. அது, தொழில் புரட்சியை செய்யும் என்று சொல்ல முடியாது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையுடனான கனவுத்திட்டங்கள், எளிதில் வெற்றி பெறுகின்றன.பணமின்றி தொழில் செய்ய முடியாது. ஆனால், போதிய முதலீடு இல்லாமல், பலர் களமிறங்கி விடுகின்றனர். 'மேக் இன் இந்தியா' திட்டம், தொழில் முனைவோருக்கான வரம். ஏனெனில், சிறந்த தொழில் ஐடியாக்களுக்கு, நிதியுதவி என்பது எளிதாகக் கிடைக்கிறது.
இந்தத் தொழில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை, அதிகாரிகளுக்கு வந்தால், கடன் என்பது எளிமையாகக் கிடைக்கும். கடனை முறையாகவும், வேகமாகவும் திருப்பிக் கொடுப்பவர், வங்கிகளுக்கு ஒருவகையில், சிறந்த வாடிக்கையாளரே!முதலீடு எளிதாகக் கிடைத்துவிட்டால், தொழிலில் வெற்றி என்பது, எளிதாகி விடாது. எந்தத் தொழில் திட்டத்தையும் எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி வலுவானதாக மாறும். நுணுக்கங்கள் மற்றும் யுக்திகள் இன்றி, தொழில் வெற்றி பெற்றாலும் கூட, அது நிலைப்பதில்லை என்பதே உண்மை.வர்த்தகம் என்பது, உடனே விரிக்கும் கடைச்சரக்கல்ல. இது முரண்பாடானதாக தோன்றலாம். ஏனெனில், போதுமான, தேவையான சோதனைகளை மேற்கொள்ளாமல், உடனே துவங்கப்படும் வர்த்தகம் வெற்றி பெறுவதில்லை. குறைகள் இருக்கக்கூடாது என்பதல்ல; நிறைகளே அதிகம் இருக்க வேண்டும். நிறைகள் இருப்பின், குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை.வெற்றிக்கு என்ன வழி!ஒரு ஓட்டலில், எல்லாமே சுவையுடன் இருக்கின்றன. காபியின் சுவை மட்டும் சரியில்லை. மற்ற உணவுப்பதார்த்தங்கள் சுவையாக இருப்பதால், அந்த ஓட்டலுக்கு நிச்சயம் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
ஆனால், காபியை தவிர்த்து விடுவார்கள். உணவுப் பதார்த்தங்களுடன் காபியும் சுவையாக இருந்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகும்.சிறந்த திட்டமிடல், சந்தை குறித்த பரந்துபட்ட அறிவு, மக்களுக்கு தேவையான சேவை, தொழில்நுட்ப நிபுணத்துவம், பங்குதாரர்களின் நேர்மை ஆகியவை இருந்தால், தொழில்முனைவோர் எளிதாக வெற்றியை ஈட்டிவிட முடியும்.சவால்களால் சாதிக்கலாம்மாதிரி வினாத்தாள் கொண்டு, மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுவதுண்டு. மாதிரி என்ன என்பது புரிந்து விட்டால், அதற்கேற்ப பயிற்சி பெற்றால், கேட்ட கேள்விக்கு எல்லாம் எளிதாக விடையளித்து விடுவர். மாதிரி வினாத்தாள் இன்றி, புதிய முறையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டால், மாணவர்கள் திணறுவர். அதை எதிர்கொள்ளப் பழகிவிட்டால், அந்த மாணவனே சிறந்தவனாக ஜொலிப்பான். சொந்த தொழில் புரிவோருக்கும், இது நிச்சயமாக பொருந்தும். சவால் இல்லாமல் சரித்திரம் படைக்க முடியாது. தொழிலில் சரித்திரம் படைக்க வேண்டும் என்றால், சவால்களை சந்தித்தாக வேண்டும். சவால்களை வரவேற்கப் பழகும் தொழில்முனைவோர், விரைவில் வெற்றியாளராகி விடுகிறார்!தோல்வியை கொண்டாடுங்கள்
எதிர்பார்ப்புகள் இல்லாமல், தொழில்முனைவோர் இருக்க முடியாது. ஆனால், நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத எதிர்பார்ப்புகளை பலரும் கொண்டிருப்பதால், தொழிலை தோல்வி தழுவி விடுகிறது. தொழில் துவங்கிய இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெரிய லாபத்தை பார்க்க முடியாது. நீடித்த தொடர் முயற்சியே லாபத்தைப் பெற்றுத்தரும். லாபம் என்பது வரத் துவங்கிவிட்டால், அது கோடிகளில் கொட்டிக்கொண்டே இருக்கும்!
தோல்விகளை ஏற்கப் பழகினால், வெற்றி எளிதாகும். தோல்வியை கொண்டாடுங்கள் என்பது, இன்றைய புது மொழி. தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடத்தைப் போன்று சிறந்தது எதுவும் இருக்காது. அது வெற்றிக்கான உரைகல்லாகும். சிறந்த பாடத்தைக் கற்றுத்தருபவர் தானே சிறந்த குரு! தோல்வி, வெற்றிக்கான சிறந்த பாடத்தைக் கற்றுத்தருவதால், அதைக்கொண்டாடுவதில் தவறென்ன!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X