பொது செய்தி

இந்தியா

லோக்சபா தேர்தல் எதிரொலி: காலியாகிறது வளைகுடா நாடு!

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (32)
Advertisement
லோக்சபா தேர்தல், வளைகுடா நாடு

நம் நாட்டில் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், வளைகுடா நாட்டில் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஓட்டுப் போடுவதற்காக, அங்குள்ள, என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், சொந்த ஊருக்கு செல்வதால், வளைகுடா நாடுகள் காலியாக வருகின்றன.

இந்த லோக்சபா தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை பார்க்கும், வசிக்கும், இந்திய பாஸ்போர்ட் உள்ள, என்.ஆர்.ஐ.,க்கள், தேர்தலில் ஓட்டுப் போட பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. உலகெங்கும், 3.10 கோடி, என்.ஆர்.ஐ.,க்கள், தங்களை வாக் காளர்களாக பதிவு செய்துள்ளனர். வளைகுடா நாடுகளில் மட்டும், 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்; இவர்களில், 80 ஆயிரம் பேர், கேரளாவைச் சேர்ந்தவர்கள்.ஓட்டுப் போடுவதற்காக, இவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர்.




கேரளாவில், 20 தொகுதி களுக்கு, 23ல் தேர்தல் நடக்கிறது. பலர் ஏற்கனவே, மலையாள புத்தாண்டான, விஷுவுக்காக வந்துள்ளனர். அவர்கள், தேர்தல் முடியும் வரை காத்திருக்க உள்ளனர்.இதைத் தவிர, ஆயிரக்கணக்கான மலையாளிகள், அடுத்த சில நாட்களில் வருகின்றனர். அதனால், விமானங்களில் குழுவாக டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் உள்ள பல அமைப்புகள், இதற்கான வசதி களை செய்து வருகின்றன. குறிப்பிட்ட சில கட்சிகளின் வெளிநாட்டு அமைப்புகள், வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. தற்போது, பயண வசதி யையும் செய்கின்றன. கட்டணச் சலுகை போன்றவை அளிக்கின்றன.வளைகுடா நாடுகளில், 2012ல், 10 ஆயிரம், என்.ஆர்.ஐ.,க்கள் ஓட்டளிக்கும் உரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதில், 9.838 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
கடந்தாண்டு அக்டோபரில் இருந்து, ஓட்டளிக்கும் உரிமை கேட்டு பதிவு செய்வது தீவிரமானது. அதன்படி, வளைகுடா நாடுகளில் மட்டும், 87 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்; 80 ஆயிரம் பேர் மலையாளிகள். விமானங்களில் வரும், மலையாளி, என்.ஆர்.ஐ.,க்களை, அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அழைத்துச்செல்லவும் கேரளாவில் சிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- நமது நிருபர்

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஏப்-201918:20:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நேத்து வரைக்கும் ஆஹா ஐயப்பா ன்னு கேட்டது.. இப்போ ஐயோ அப்பான்னு கேக்குதே.. ஏன்.
Rate this:
Share this comment
Vijay - Bangalore,இந்தியா
23-ஏப்-201909:56:07 IST Report Abuse
Vijayயேசப்பா சேஷப்பா மாதிரி தான்...
Rate this:
Share this comment
Vijay - Bangalore,இந்தியா
23-ஏப்-201910:04:31 IST Report Abuse
Vijayகாதுல ஈயத்தை காட்சி ஊதினால் ஒழுங்கா கேக்கும்னு சொல்லுவாங்க .. செஞ்சி பாரு ....
Rate this:
Share this comment
Karunan - udumalpet,இந்தியா
24-ஏப்-201906:36:23 IST Report Abuse
Karunanசுத்தமாப்போன ஜைஹிந்த் கருத்துப்போடலாம்...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-ஏப்-201917:06:08 IST Report Abuse
Cheran Perumalபாவம் விடுங்கள், செய்தியை கேட்டுவிட்டு எத்தனை தடவை பாத்ரூம் போனானோ?...
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
21-ஏப்-201916:33:37 IST Report Abuse
J.Isaac யோக்கியரை எங்கும் காண முடியாது
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
21-ஏப்-201915:56:28 IST Report Abuse
J.Isaac கேரளாவின் எத்தனை வடநாட்டவர் தொழில் நடத்துகிறார்கள் ?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஏப்-201918:17:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்முட்டை....
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
22-ஏப்-201908:49:24 IST Report Abuse
 nicolethomsonகடினமான கேள்வி...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-ஏப்-201917:06:54 IST Report Abuse
Cheran Perumal...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X