காங்.,கில் கோஷ்டி மோதல் இல்லை: ஹிமாச்சல் தலைவர், 'தில்' பேட்டி

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 காங்.,கில் கோஷ்டி மோதல் இல்லை: ஹிமாச்சல் தலைவர், 'தில்' பேட்டி

கடந்த லோக்சபா தேர்தலில், ஹிமாச்சலில் உள்ள, நான்கு தொகுதிகளிலும், பா.ஜ., வென்றது. சட்டசபை தேர்த லிலும், பா.ஜ., வென்றது. காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்தித்தது.இந்த இக்கட்டான நேரத்தில், இந்தாண்டு ஜனவரியில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட வர், குல்தீப் சிங் ரதோட். கோஷ்டி பிரச்னைகள் அதிகம் உள்ள நிலையில், மே, 19ல் நடக்கும் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்கிறார்.

அவர் அளித்த பேட்டி:
கடந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. தற்போது, காங்., நிலைமை எப்படி உள்ளது?
கடந்த தேர்தலில் நாங்கள் மோசமாக தோற்றோம்; இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு அந்த நிலைமை தான் ஏற்பட போகிறது. தற்போது மோடி அலை எங்கும் இல்லை; அதனால், நான்கிலும் நாங்கள் வெல்வோம். நாட்டு மக்களை, பிரதமர், மோடி ஏமாற்றி விட்டார். குறிப்பாக, ஹிமாச்சல் மக்களை மிகவும் ஏமாற்றி விட்டார். அதனால், இந்த முறை எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த நம்பிக்கைக்கு காரணம் என்ன?ஹிமாச்சல் மக்கள் மிகவும் சாதாரணமானவர்கள். மோடி பிரதமரானால், நல்லது செய்வார் என்று நம்பினர். ஆனால், ஏமாற்றமே கிடைத்தது. அவர் பிரதமரானதால், மாநிலத்துக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. பா.ஜ., - எம்.பி.,க்களும் தங்கள் கடமையில் தோல்வி அடைந்து விட்டனர். அதனால், இந்த முறை, அவர்களுக்கு வாய்ப்பளிக்க மக்கள் தயாராக இல்லை.

காங்.,குக்கு வேறு எவைசாதகமாக உள்ளன?மூன்று விதங்களில், பா.ஜ., தோல்வி அடைந்து விட்டது. 'ரபேல்' போர் விமான ஊழல்; வேலைவாய்ப்பை உருவாக்காதது; மாநிலத்தில் உள்ள, முதல்வர், ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., அரசின் மோசமான நிர்வாகம். மோடி ஒரு பொய்யர் என, மக்கள் நினைக்கின்றனர். அவரின் ஏமாற்று வேலைகள், இந்த முறை பலிக்காது.

அப்படி இருக்கையில், ஏன், மூத்த தலைவர்கள் போட்டியிட மறுத்துஉள்ளனர்?பா.ஜ.,வுக்கு சவால் விடுக்கும் வகையில், மூத்த தலைவர்களை நிறுத்த வேண்டும் என, விரும்பினோம். முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, வீர்பத்ர சிங் போட்டியிட விரும்பினோம். ஆனால், சில காரணங்களால், தேர்தலில் போட்டியிட அவர் தயாராக இல்லை.பா.ஜ.,வில், மூத்த தலைவர், சாந்த குமார் போட்டியிடவில்லை. தற்போதுள்ள, நான்கு, எம்.பி.,க் களில், இருவருக்கு அவர்கள் மீண்டும் வாய்ப்பு தரவில்லை. அதனால், தற்போது நாங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்களே வெற்றி பெறுவர்.

கட்சிக்குள் உள்ள கோஷ்டி மோதல் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா... வீர்பத்ர சிங் பிரசாரம் செய்வாரா?கடந்த, மூன்று மாதங்களில், கட்சியின் அனைத்து தலைவர்களுடனும் பேசினேன்; தொண்டர்களுடனும் பேசினேன். பிரச்னைகள் தீர்க்கப்பட்டு உள்ளன. கட்சியில் கோஷ்டி மோதல் ஏதும் இல்லை. வீர்பத்ர சிங், மிகவும் மூத்த தலைவர்; அவர் அனுபவத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவருடன், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசினோம்; பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்டுஉள்ளார்.பா.ஜ.,வில் இருந்து, சுக்ராம் மீண்டும் திரும்பியுள்ளார்.

அவர் பேரன், மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு, வீர்பத்ர சிங் பிரசாரம் செய்வாரா?காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வுக்கு சென்ற, முன்னாள் அமைச்சர், சுக்ராம் இங்கு திரும்பி வந்துள்ளது, பா.ஜ.,வுக்கு பெரிய பின்னடைவே. மண்டி தொகுதியில், அவருடைய பேரன், அஷ்ரே போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி, பா.ஜ., முதல்வர், ஜெய்ராம் தாக்குரின் சொந்த தொகுதியாகும். இங்கு தோல்வியடைந்தால், அவர் பதவிக்கு ஆபத்து ஏற்படும். விரைவில் அது நடக்கும். மண்டியில், வீர்பத்ர சிங் பிரசாரம் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201908:48:17 IST Report Abuse
Srinivasan Kannaiya ... வரும் தேர்த்தில் முடிவுகள் இது உண்மையா பொய்யா என்று சொல்லிவிடும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஏப்-201908:14:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இருக்கு, ஆனா இல்லை.. கோஷ்டி இருக்கு ஆனா மோதல் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X