ஆம் ஆத்மிக்கு, 'ஜாம் ஜாம்' : கோவா தேசிய கட்சிகள் கலக்கம்

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ஆம் ஆத்மிக்கு, 'ஜாம் ஜாம்' : கோவா தேசிய கட்சிகள் கலக்கம்

கோவாவின் இரண்டு லோக்சபா தொகுதிகளும், ஆம் ஆத்மி வசம் சென்று விடுமோ என, இரண்டு தேசிய கட்சிகளும் அச்சத்தில் உள்ளன.

மஹாராஷ்டிராவின் அருகில் உள்ள கடலோர மாநிலமான, கோவாவில், இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. தெற்கு கோவா, வடக்கு கோவா தொகுதிகளில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள, சிவசேனா, வடக்கு கோவா தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி உள்ளது, இந்த தொகுதியில் புதுமையாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த கட்சிகள் அனைத்தையும் ஓரங்கட்டும் வகையில், ஆம் ஆத்மியும் இரண்டு தொகுதி களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.தெற்கு கோவாவில் நிற்கும், முன்னாள் அரசு அதிகாரி, எல்விஸ் கோம்ஸ் மற்றும் வடக்கு கோவாவில் போட்டியிடும், ஆம் ஆத்மியின், பொதுச் செயலர், பிரதீப் பட்ஹோங்கர் ஆகிய இருவருக்கும், இளைஞர்களிடையே செல்வாக்கு உயர்ந்துஉள்ளது.அதனால், இரண்டு தேசிய கட்சிகளும், சிவசேனாவும் கலக்கத்தில் உள்ளன. தங்களை தேர்வு செய்தால், கோவாவுக்கு புதிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவோம் என, கடலோர பகுதியில், தங்களின் முதல் வெற்றிக்கு, ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர்.இங்கு, 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது; ஓட்டு எண்ணிக்கை, மே 23 தான்!

- சுனிதா தாஸ்
-சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201908:44:19 IST Report Abuse
Srinivasan Kannaiya மாற்றம் வேண்டும்... அது ஆம்ஆத்மியாக இருந்தால் சந்தோஷம்
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலை கேஜ்ரிவால் அடுத்த வாரம் மஸ்கட் வந்து உங்கள் ஒத்துழைப்பு மற்றும் கூட்டணி நாடுகிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X