பழங்குடியின கட்சி விறுவிறு... பா.ஜ., - காங்கிரஸ் கலக்கம்

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பா.ஜ., காங்கிரஸ்

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா தொகுதியில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கலங்கும் வகையில், புதிய பழங்குடியின கட்சியின் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

ராஜஸ்தானில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளே மாநிலத்தில் ஆளும் கட்சிகளாக, லோக்சபா, எம்.பி.,க்களாக மாறி மாறி வருவது வழக்கம். இதில் ஒரு மாற்றமாக, பன்ஸ்வாரா என்ற தொகுதியில், பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக உருவான, பாரதிய பழங்குடியின கட்சியின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது.

பிரசாரம்பன்ஸ்வாரா தொகுதியில், 12 முறை காங்கிரசும், ஜனதா கட்சி மற்றும் பா.ஜ., தலா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்.பி.,யாக, மன்ஷங்கர் நினாமா உள்ளார். இவருக்கு மீண்டும், 'சீட்' தரப்படவில்லை.பா.ஜ., சார்பில், ராஜ்யசபா எம்.பி., கனக்மல் கடாராவும், காங்., சார்பில், முன்னாள் எம்.பி., தாராசந்த் பகோராவும் போட்டியிடுகின்றனர். இவர்களில், பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக அவரது மருமகளே பிரசாரம் செய்வதால், அவரது வெற்றி வாய்ப்பு குறைந்து உள்ளது.இந்த தொகுதியில், 13 லட்சத் துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

பழங்குடியின மக்களை இணைத்து, பழங்குடியினருக்கு, தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.பின்னடைவுஇதற்காக, பாரதிய பழங்குடியின கட்சி உருவாகியுள்ளது. இந்த கட்சியின் வரவால், பழங்குடியின பகுதியில் செல்வாக்கு நிறைந்து காணப்பட்ட கிறிஸ்துவ அமைப்புகளும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், பின்னடைவை சந்தித்து உள்ளன.

கடந்த, 2017ல் உருவான பாரதிய பழங்குடியின கட்சி, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுஉள்ளது. இந்த வெற்றியுடன் தற்போது, பன்ஸ்வாரா லோக்சபா தொகுதியில் வெற்றி பெறவும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.தற்போதைய நிலையில், இந்த கட்சியால் தனித்து வெற்றி பெற முடியாது என்றாலும், யார் ஓட்டை, பழங்குடியின கட்சி பிரிக்குமோ என, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.



- ஆபா சர்மா
-சிறப்பு செய்தியாளர்

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஏப்-201918:15:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அடுத்த தேர்தலில் மெகா கூட்டணி தான்..
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-201916:34:45 IST Report Abuse
Bhaskaran முதலில் பழங்குடியினருக்காக குரல் கொடுப்பவர்கள் பின் கோடீஸ்வரர்கள் ஆகி விடுவார்கள் தமிழ்நாட்டில் இதுபோன்று நிறையபேர் இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
jannett warrior - chennai,இந்தியா
21-ஏப்-201910:39:25 IST Report Abuse
jannett warrior பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக அவரது மருமகளே பிரசாரம் செய்வதால், அவரது வெற்றி வாய்ப்பு குறைந்து உள்ளது இப்படி எதையாவது சொல்லி வைப்பது பின்னர் பாஜ கட்சி உண்மையிலேயே தோற்றாலும் ஆறுதல் தேடிக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலை உண்மையில் அப்படி நிலைமை இருப்பதை எழுதினால் அதற்கும் ஒரு குறை. ஏன் காங்கிரஸ் தோற்காதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X