இடைத்தேர்தல்: அலுவலர்கள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல்: அலுவலர்கள் நியமனம்

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (1)
இடைத்தேர்தல், அலுவலர்கள் ,நியமனம், சூலூர், அரவக்குறிச்சி

சென்னை: அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக மீனாட்சி என்பவரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஈஸ்வரன், அமுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக பாலகிருஷ்ணன் என்பவரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஜெயராஜ், மீனாகுமாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை, அரவக்குறிச்சி மற்றும் சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் வரும் 22 முதல் 29ம் தேதி வரைதாக்கல் செய்யலாம் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X