சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாட்சி சம்பவம் போல் பெரம்பலூரில் கொடுமை

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement

திருச்சி; பொள்ளாட்சி சம்பவம் போல், பெரம்பலுாரிலும், அதே போன்ற பாலியல் வன்கொடுமையை முக்கிய பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர் அரங்கேற்றி உள்ளனர். இந்த கொடூர சம்பவம் விரைவில் விஸ்வரூபம் எடுக்க உள்ளது.
பெரம்பலுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்களை வளைத்து, பெரம்பலுாரில் உள்ள லாட்ஜ்களில் வைத்து, அவரும் அவரது ஆதரவாளர் ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனராம்.
இதோடு மட்டுமல்லாமல், அப்பெண்களோடு தாங்கள் உல்லாசமாக இருப்பதை, அப்பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளனராம். அதை அப்பெண்களிடம் காண்பித்து மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்துள்ளனராம். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்த, திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள இளம்பெண், மற்றும் மலைக்கோட்டை மாநகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகியோரை பெரம்பலுாரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் வைத்து, முக்கிய பிரமுகரும், அவரது ஆதரவாளரான வீடியோகிராபர் ஒருவரும் அடுத்தடுத்து உல்லாசமாக இருந்து, அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, இவர்கள், அவர்களை தாங்கள் கூப்பிடும் போதெல்லாம், உல்லாசத்துக்கு வற்புறுத்தி உள்ளனர்.
தொடர்ந்து இவர்களின் தொந்தரவு தாங்கிக் கொள்ள முடியாத, 2 குழந்தைக்கு தாயான ஒரு பெண், தனது குடும்ப வாழ்க்கை பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுத்து, அந்த வீடியோ பதிவை தன்னிடம் வாங்கித் தருமாறு, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் புகார் செய்தாராம் . இதன்படி, அந்த அதிகாரியும் வீடியோ பதிவு சீடியை வாங்கி கொடுத்து விட்டாராம். இதேபோல், பல பெண்களிடம் அந்த முக்கிய பிரமுகர், தனது ஆதரவாளருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றி உள்ளாராம்.அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு இளம்பெண்ணை முக்கிய பிரமுகர் போனில் உல்லாத்துக்கு அழைத்துள்ளாராம். இதோடு மட்டுமல்லாமல் அந்த முக்கிய பிரமுகரின் ஆதரவாளர் இவரால் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பங்களும் அரங்கேறி உள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில், தனியார் கல்லுாரி போராசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவிகளும் உள்ளனாராம்.

இவர்களின், இந்த அந்தரங்க சம்பவம் குறித்து சில முக்கிய கட்சிகளின் தலைமைக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாம். அதனால் இப்பிரச்சனையை கிளப்ப முடிவு செய்துள்ளனராம். ஏற்கனவே, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, சிறையில் உள்ள நிலையில், பெரம்பலுாரை சேர்ந்த முக்கிய பிரமுகரின் பாலியல் பலாத்கார விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஏப்-201914:29:11 IST Report Abuse
Natarajan Ramanathan அரசு வேலை என்றால் எந்த கீழமைக்கும் மக்கள் பலியாக காரணமே அதற்கு கிடைக்கும் அபரிமிதமான சம்பளமும் அநியாயமான சலுகைகளும்தான். எனவே பென்ஷனை நிறுத்தியதுபோல மற்ற பல அநியாய சலுகைகளையும் நிறுத்தி அரசு வேலை என்பது மக்கள் பணி என்ற நிலை வரவேண்டும். சம்பளமே இல்லாமல் பொது மக்களிடம் ஒவ்வொறு பணிக்கும் ஒரு தொகை நிர்ணயித்து அதைப் பெறும் நிலை வந்தால் பொதுமக்களையும் நல்ல மரியாதையுடன் நடத்தும் நிலை வரும்.
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201914:17:10 IST Report Abuse
ருத்ரா பிரமுகர் என்றால் சில நல்லவர்களும் வதந்திக்குள் வருவார்கள். அதனால் மாண்புமிகு, பிரமுகர் என்று குறிப்பிடாமல் கிரிமினல் என்றே குறிப்பிடவும் உண்மை என்றால். பெண்களும் வேலை வாய்ப்பு என்று கூறினால் பாதுகாப்பு இன்றி போகாதீர்கள். முடிந்த வரை தெரியாதது போல் உங்கள் மொபைலில் அவரது முகத்தை பதிவு செய்யலாமே. சமயோசித புத்தி மிக அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
srinath - coimbatore,இந்தியா
21-ஏப்-201913:34:06 IST Report Abuse
srinath அந்த முக்கிய புள்ளி நம்ம இடுப்பு கிள்ளி திமுக 2g புகழ் ராசாவா இருக்குமோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X