அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி சஸ்பெண்ட்

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (26)
Advertisement

மதுரை: மதுரையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள் அறைக்குள் நுழைந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு மின்னணு இயந்திரங்கள் மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.





இங்குள்ள அறைக்குள் பெண் தேர்தல் அலுவலர் சம்பூர்ணம் நுழைந்துள்ளார். அங்கு இருந்த ஓட்டு பெட்டிகள் தொடர்பான நகல்கள் எடுத்துள்ளார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதனையடுத்து அங்கு திமுக, இடதுசாரி, அமமுகவினர் கூடினர். பெண் அதிகாரி வந்தது குறித்து அரசியல் கட்சியினர் சந்தேகம் எழுப்பினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறுகையில்; ஸ்டோர் அறையில் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளேன். முழு தகவல் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றார்.



மதுரை மார்க்., கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன் கூறியதாவது: மதுரை மேற்கு தொகுதி பொருட்கள் அறையில் 3 பேர் வந்து சில ஆவணங்களை பார்த்துள்ளனர். காவல்துறை விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் எவ்வித அனுமதிக்கான உரிமம் இல்லை என தெரிய வந்தது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு இன்னும் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், அந்த பெண் அதிகாரி சம்பூரணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு கலெக்டர் நடராஜன் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், வாக்கு இயந்திரம், தபால் வாக்குகள் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழையவில்லை; அவர் சென்ற அறை ஸ்டோர் ரூம். பெண் அதிகாரி அறைக்குள் நுழைந்தது சென்றது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-ஏப்-201905:53:52 IST Report Abuse
D.Ambujavalli அவர் வேண்டிய குறிப்புகளை எடுத்து, அனுப்பியவர்களுக்கு பாஸ் செய்தாயிருக்கும். அவருக்குப் ‘பேசப்பட்டது’ போய் சேர்ந்திருக்கும் எத்தனை தொகுதியின் ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டனவோ, சும்மா அவர் ஸ்ட்ராங் ரூமுக்குச் செல்லவில்லை என்கிறார். இதிலிருந்து தெரிவது : சில வீக்கான தொகுதிகளின் மிஷின்கள் அப்புறப்படுத்தப்பட்டு பக்காவான சில Replace செய்யப்படுமா, எதோ பெரிய சதி உள்ளது. அந்தம்மா ஒன்றும் தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல் அறை மாறி வரவில்லை எலெக்ஷன் கமிஷனருக்கு சப்பைக்கட்டுவதை பார்த்தால் கூட்டுச் சதியென்றே தோன்றுகிறது ரிசல்ட் வந்ததும் பெரிய பூகம்பம் வெடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
22-ஏப்-201900:35:55 IST Report Abuse
a.s.jayachandran முதலில் 5 ஆண்டுகள் முடிந்ததும் ஆட்சியை கலைத்துவிடவேண்டும்.தேர்தல் முடியும் வரை ராணுவத்தின் ஆட்சியை கொண்டுவரவேண்டும்.யார் தேர்தலில் வெற்றிபெறுகிறார்களோ அவர்களை ஆட்சி அமைக்க சொல்லவேண்டும்.அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தேர்தல் நடத்தினால் இதுபோலத்தான் நடக்கும்.இந்த தாசில்தார் வருங்காலத்தில் மாவட்ட ஆட்சியர் பதவி உயர்வு பெறுவது நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-201919:27:28 IST Report Abuse
Malick Raja எல்லாம் கோல்மால் கும்பல்கள் வேலைககளாக இருக்கும் .. உண்மை மட்டுமே வெல்லும் . பொய் வெல்வது போல இருப்பினும் வீழந்து அழிவது மட்டும் உறுதி ...சூழ்ச்சிகள் நிலைத்ததாக சரித்திரம் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X