இலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் துயரம்; பலி 207 ஆக உயர்வு

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (185)
Advertisement

கொழும்பு: ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் 3 தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்கள் என 8 இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 207 பேர் பலியானார்கள். 450க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் விஜயவர்தன கூறியுள்ளார்.
ஈஸ்டர் திருநாளில் பயங்கரம்


கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. இந்நிலையில் கொச்சிக்கடை செயின்ட் அந்தோணியார் , நீர்க்கொழும்பு கத்துவாபட்டியா செபஸ்டியான் ஆலயம் , பட்டிகோலாவில் உள்ள சீயோன் ஆலயம் ஆகிய 3 ஆலயங்களில் பிரார்த்தனையின் போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பலர் ரத்த காயங்களுடன் விழுந்தனர். சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.நட்சத்திர ஓட்டல்கள்இந்த தாக்குதலில் ஈடுபட்டது எந்த பயங்கரவாத அமைப்பினர் என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை. மேலும் பிரபல நட்சத்திர ஓட்டல்களான சங்ரிலா, சின்னமோன்கிராண்ட், கிங்ஸ்புரி போன்ற ஓட்டல்களிலும் குண்டு வெடித்துள்ளது. இந்த ஓட்டல்கள் இந்தியர்கள் அதிகம் தங்கும் நட்சத்திர ஒட்டல் ஆகும்.

இதற்கிடையில் மதியம் 2 மணியளவில் தெகிவாலா பகுதியில் (7 வது குண்டுவெடிப்பு) உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாயினர். மதியம் 2.45 மணியளவில் டெமாட்டாகொடா என்ற ( 8 வது குண்டுவெடிப்பு) பகுதியில் குண்டு வெடித்தது. இதில் பலியானவர்கள் விவரம் வெளியாகவில்லை.


சிறிது காலம் அமைதியாக இருந்த இலங்கையில் தற்போது வன்முறை தலைதூக்கியுள்ளது கவலை அளிப்பதாகும். 10 ஆண்டுகளுக்கு பின் குண்டு சப்தம் கேட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கு எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
23-ஏப்-201910:34:13 IST Report Abuse
S Ramkumar இது சமீப காலங்களில் இலங்கையில் அதிகரித்துள்ள கிருத்துவ மதமாற்றத்தை குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இலங்கையில் அதிகம் என்றாலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் வரை செல்வார்களா என்பது சந்தேகத்திற்குரியதே. இங்கு கிருத்துவர்களுக்கு புத்த மதத்திற்கும் தான் நேரடி போட்டி.
Rate this:
Share this comment
Cancel
VIVEKANANTHAN - Chennai,இந்தியா
22-ஏப்-201902:22:29 IST Report Abuse
VIVEKANANTHAN Nanbarkale.. Innerathil Ungalin matham thodarpana karthukkal mikavum vethanai alikirathu..
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
23-ஏப்-201920:09:28 IST Report Abuse
sivan மதத்தினால்தான்.. அல்லது தங்கள் மதத்தை promote செய்கிறேன் பேர்வழி என்று எல்லை மீறி செல்வதால் தான் பிரச்சினையே வருகிறது அதை புரிந்து கொள்ளுங்கள். அவரவர் தனக்கு பிடித்த மதத்தை பின்பற்றட்டும் .. அதை விடுத்து மதத்தை promote செய்வதுதான் தங்கள் கடவுளுக்கு செய்யும் சேவை என்று நினைக்க ஆரம்பித்தால் வில்லங்கமாகி விடுகிறது. எந்த கடவுளுக்கும் தங்களை promote செய்ய மனிதர்களின் உதவி தேவை இல்லை....
Rate this:
Share this comment
Cancel
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201901:58:02 IST Report Abuse
srideesha இலங்கையில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது. நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பது இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இதை நிகழ்த்தியவர்களை இலங்கை அரசு இரும்புக்கரம் கொண்டு நசுக்கும் என்று நம்புகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X