சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூரில் ரவுடி வெட்டிக்கொலை; இளைஞருக்கு வலைவீச்சு

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement

வேலுார் : வேலூரில் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 3-வது தெருவை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் செல்வராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. செல்வராஜ் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று இரவு 7.30 மணியளவில் செல்வராஜ் தனது வீட்டின் அருகே உள்ள சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து, திடீரென அரிவாளால் செல்வராஜை வெட்ட முயன்றுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். எனினும் அந்த இளைஞர், செல்வராஜை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதியில் வெட்டியுள்ளார்.
ரத்தவெள்ளத்தில் உயிரை காப்பாற்ற ஓடிய செல்வராஜ் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து மறுபுறம் உள்ள ஆவின் பால்பண்ணை வளாக நுழைவு வாயில் கேட்டை திறந்து தடுமாறி கீழே விழுந்தார். அவரை விரட்டி வந்த இளைஞர், அங்கிருந்த பால்பண்ணை காவலாளி விசில் ஊதியதால், அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதையடுத்து காவலாளி சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் செல்வராஜை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை வெட்டிக்கொலை செய்த மர்மநபர் யார்? குடும்ப தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதக் கொலையா? என்று பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஏப்-201904:21:51 IST Report Abuse
Pannadai Pandian தினை விதைத்தவன் திணையைத்தான் அறுவடை செய்ய வேண்டும்…..
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-201914:48:16 IST Report Abuse
Bhaskaran கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X