கோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

Added : ஏப் 21, 2019

திருச்சி : துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். இந்தப் பரிதாப சம்பவத்தில், படுகாயத்துடன் 10 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முத்தையாம்பாளையத்தில் உள்ளது கருப்பசாமி கோவில். சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, பிடிக்காசு வழங்கும் வைபவம் நடந்தது. இப்பகுதியில் பிரபலமான இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலில் சிக்கி, 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.
படுகாயமடைந்த 10 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X