10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (1)
10 ஓட்டுச்சாவடி, மறுவாக்குப்பதிவு, பரிந்துரை

சென்னை : தமிழகத்தில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது, தமிழக தேர்தல் ஆணையம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ கூறுகையில், '' தமிழகத்தில், தர்மபுரி லோக்சபா, பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதியில் மட்டும் 8 ஓட்டுச்சாவடியிலும், திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பூவிருந்தவல்லி சட்டப்பேரவை தொகுதி மற்றும் கடலுார் தொகுதியில் என, தலா ஒரு ஓட்டுச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஏற்கனவே, தர்மபுரி, கடலுார் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றியதாக புகார்கள் வந்த நிலையில், தேர்தல் அலுவலர்களிடம் விசாரித்த அடிப்படையில், சத்யப்பிரதா சாஹூ இந்தப் பரிந்துரையை செய்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள், கூறுகின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X