கொழும்பு: இலங்கையில் இன்று ( 21 ம் தேதி) காலை 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் காலை. 8. 45 மணியளவில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. கொச்சக்கடை, நீர்க்கொழும்பு, மட்டக்களப்பு, மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்தது. இதில் 129 பேர் பலியாகி உள்ளனர். 300 பேர் காயமுற்றுள்ளனர். தற்கொலை படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 9 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். ஷக்ரான் ஹசீம் மற்றும் அபு முகம்மது என்ற இருவர் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக தெரிய வந்துள்ளது.

குண்டுவெடிப்பு தொடர்பாக அவசர எண்ணாக 947790302 அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE