குண்டுவெடிப்பு: இந்தியா கண்டனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குண்டுவெடிப்பு: இந்தியா கண்டனம்

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (9)
SriLanka, Colombo, இந்தியா, இலங்கை, கண்டனம், ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி,

புதுடில்லி: இலங்கையில் நடத்தப்பட்ட கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இரங்கல்இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா கண்டனமும், மக்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம். இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது.
கண்டனம்

Advertisementபிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடந்த கொடூர சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இது குறித்து பெரும் கவலையுற்றேன். இந்த துயரமான தருணத்தில் இலங்கை மக்களுக்கு ஆறுதல் கூறுகிறேன். பயங்கராவதத்திற்கு இந்தப் பிராந்ததியத்தில் இடமில்லை. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.


இரங்கல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கை: கொழும்புவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது, 300க்கும் மேற்பட்டவர் காயம் அடைந்தது கவலை அளிக்கிறது. இந்த கொடூரமான பயங்கரவாத சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்.
நம்பிக்கை


பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் கவலை அளிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை இழந்து வாடுவோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புகிறேன். இந்த துயரமான நேரத்தில் இலங்கையுடன் நாங்கள் துணை நிற்கிறோம்.
கடும் நடவடிக்கை


திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
சோக செய்தி


டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கை: ஈஸ்டர் நாளில் இலங்கையில் இருந்து சோகமான செய்தி வந்துள்ளது. உலகின் எந்த பகுதியிலும், மனிதநேயத்திற்கு எதிரானவவர்கள் வெற்றி பெற அனுமதிக்கக்கூடாது. பயங்கரவாத சம்பவங்களுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும்.
கண்டனம்


மேலும், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X