ஈஸ்டர் பிரார்த்தனை ரத்து| Dinamalar

ஈஸ்டர் பிரார்த்தனை ரத்து

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (3)
ஈஸ்டர் பிரார்த்தனை, இலங்கை, கொழும்பு,SriLanka, Colombo

கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்புவில், அடுத்தடுத்து 4 ஹோட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதில், 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மொத்தம் இதுவரை 8 இடங்களில் குண்டுகள் வெடித்து நாடே பெரும் பதற்றத்தில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பலநாடுகளின் தலைவர்களும் இந்த கொடூர பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், ஈஸ்டர் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்படுவதாக, அம்மாவட்டத்தின் பேராயர் ரஞ்சித் அறிவித்துள்ளார். அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X