இலங்கை முழுவதும் ஊரடங்கு ;சமூக வலைதளங்கள் முடக்கம்

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement
SriLanka, Colombo, இலங்கை, ஊரடங்கு, உத்தரவு

கொழும்பு: தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களால், அதிர்ந்து போயுள்ள நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, இன்று மாலை 6 மணி முதல் நாளை(ஏப்.,22) மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், மக்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம். இரண்டு நாள் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.





ராணுவ வீரர்கள் குவிப்பு


தலைநகர் கொழும்புவில் 300 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தேவைப்படும் இடங்களில் ராணுவத்தை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராணுவத்தின் நுண்ணறிவுப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பணியில், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


விடுமுறை ரத்து


குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, அனைத்து டாக்டர்கள், நர்சுகள்,சுகாதார ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


முடக்கம்

இதனிடையே, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது. பொய் தகவல்கள் பரவுவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
22-ஏப்-201909:32:07 IST Report Abuse
Sankare Eswar
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201908:13:23 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழ் ஈழ புலிகளுக்கு இழைத்த பாவத்திற்கு பதில் கொடுக்கப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201908:12:07 IST Report Abuse
Srinivasan Kannaiya கையளவு நாட்டில் இவ்வளவு பயங்கரம் நடக்க விட்டது லங்கை அரசின் கையாலாகாதனத்தை காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X