தாக்குதல் பின்னணியில் பயங்கரவாதிகள்?

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (24)
Advertisement
இலங்கை,தற்கொலைப்படை தாக்குதல், பயங்கரவாதிகள்

கொழும்பு: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல் எனவும், இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.


இலங்கையில் இன்று முக்கிய தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல 8 இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 207 பேர் உயிர் இழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.






இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவங்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான தகவல், குண்டுவெடிப்பு நடந்த ஷாங்ரி லா ஓட்டலில் நேற்று (ஏப்.,20) இரண்டு பேர் அறையெடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் தான் ஓட்டலின் உணவகம் மற்றும் வளாகத்தில் வெடிகுண்டுகளை பொருத்தியுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த ஓட்டலில் வைக்கப்பட்ட வெடிகுண்டில் 25 கிலோ சி - 4 வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இரண்டு பேர் தங்கியிருந்த அறையை உடைத்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் உள்ளூர்வாசிகளா அல்லது சுற்றுலா விசாவில் வந்த வெளிநாட்டினரா என தெரியவில்லை. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
23-ஏப்-201913:04:11 IST Report Abuse
S.P. Barucha கோவை குண்டு வெடிப்பு பாஷாவை தூக்கிலிட்டால் இந்தியாவில் தீவிரவாதம் எந்த அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது என ஆட்சியாளர்களுக்கு தெரியும். சிறையில் எல்லா வசதிகளுடன் நல்ல சாப்பாடு.
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201914:22:35 IST Report Abuse
ஆப்பு தீவிரமதம் அடக்கப்படக் கூடாது...அழிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
KSK - Coimbatore,இந்தியா
22-ஏப்-201913:24:47 IST Report Abuse
KSK எது எப்படியோ, இந்த கொடூர குண்டுவெடிப்பு தாக்குதல்கள் மூலம் மூர்க்க மார்க்க தீவிரவாதிகள் கொழுந்துவிட்டெரியும் கொள்ளிக்கட்டையால் தலையை நன்றாக அழுந்த சொரிந்து கொண்டு விட்டனர். இனி இந்த பிராந்தியத்தில் இவர்கள் தனிமைப்படுத்தபட்டு அடக்கப்படுவார்கள். இந்தியா, பர்மா,சிலோன் (இப்போது நடந்த தாக்குதல் சீனா-வின் பாக்-ஆதரவு போக்குக்கு அடிக்கப்பட்ட சாவு மணி), ஆப்கானிஸ்தான், ஈரான் , நியூஸிலாந்து , ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இவர்கள் நடத்திய கொடூர தாக்குதல்கள் யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. தீவிரவாதத்தால் பாதிக்கட்ட, பாதிக்கப்படும் நாடுகள் ஒருங்கிணைத்து உடனடியாக இது போன்ற பயங்கரவாதிகளை, அதன் அமைப்புகளை, அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் நாடுகள், நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் மூலம், இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். முக்கியமாக தீவிரவாதத்தை நீண்ட காலமாக வளர்த்து ஊக்குவித்து வரும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் மீது மிக கடுமையான பொருளாதார தடை விதிக்க வேண்டும். சர்வதேச அளவில் துல்லிய தாக்குதல்கள் மேற்கொண்டு மத வெறி பிடித்த பைத்தியக்கார்களை ஒடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X