புத்தம் புது பூமி காப்போம் - இன்று உலக பூமி தினம் - | Dinamalar

புத்தம் புது பூமி காப்போம் - இன்று உலக பூமி தினம் -

Added : ஏப் 21, 2019
 புத்தம் புது பூமி காப்போம் - இன்று உலக பூமி தினம் -

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத்தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.

பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நமது உயிரினங்களை பாதுகாப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. கடந்த 1970, ஏப்., 22ம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி, லட்சக்கணக்கான மக்கள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் போராட்டம் நடத்தினர். பின் இத்தினமே, உலக பூமி தினமாக உருவெடுத்தது.

அழியும் உயிரினங்கள்

இன்றைய சூழலில் பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு மற்றும் மனிதர்களின் பொறுப்பற்ற வாழ்க்கை முறை போன்றவை பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பல்வேறு உயிரினங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இவைகளை பாதுகாக்க இத்தினம் வலியுறுத்துகிறது.

அதிகரிக்கும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் பூமிக்குள் நிலத்தடி நீர் ஊடுருவிச் செல்லாமல் மேற்பரப்பில் தங்கி ஆவியாகிறது. பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டுமெனில் தனிமனிதர், அரசு, அமைப்பு என அனைவரும் இணைந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
மரமே தீர்வு

தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் கார்பன் அளவு, ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனை குறைக்க வேண்டுமெனில், மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இதனால் வளிமண்டலத்துக்கு செல்லும் கார்பனை, மீண்டும் மரங்களே எடுத்துக் கொள்ள முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X