5வது முறையாக வெற்றியை உரசி பார்க்கிறார் ஸ்ரீபாத்

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement

கோவாவில், பா.ஜ., வேட்பாளராக, தொடர்ந்து ஐந்தாவது முறையாக, எம்.பி., ஸ்ரீபாத் நாயக் நிறுத்தப்பட்டுள்ளார்.கோவாவில், வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என, இரண்டு தொகுதி கள் உள்ளன.







இவற்றில், பா.ஜ., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.அருகில் உள்ள மாநிலமான, மஹாராஷ்டிராவில், சிவசேனாவுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது. ஆனால், கோவாவில், வடக்கு கோவா தொகுதி யில், சிவசேனாவும், பா.ஜ.வும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.இதில், வடக்கு கோவாவில் நிறுத்தப்பட்டுள்ள, பா.ஜ., - எம்.பி., ஸ்ரீபாத் எசோ நாயக், தொடர்ந்து, ஐந்தாம் முறையாக போட்டியிடுகிறார்.






இவர் ஏற்கனவே, 1999 முதல், 2014 வரை தொடர்ந்து, நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று, எம்.பி.,யாகியுள்ளார்.தெற்கு கோவாவில், பா.ஜ., வேட்பாளராக, தற்போதைய, எம்.பி., நரேந்திர கேசவ் சவைக்கார் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், 2014 தேர்தலில் மட்டும் வெற்றி பெற்றவர். காங்கிரஸ் சார்பில், வடக்கு கோவாவில், கிரிஷ் சோலங்கர், தெற்கு கோவாவில், பிரான்சிஸ்கோ சர்திங்கா நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஆம் ஆத்மி யும் இந்த முறை, கோவாவின் இரண்டு தொகுதிகளிலும், வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. வடக்கு கோவாவில் மட்டும், பா.ஜ., ஓட்டுகளை, சிவசேனா பிரித்தால், காங்., அல்லது ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு மாறலாம் என, கருதப்படுகிறது.இங்கு, மே-23ல் தேர்தல் நடக்கிறது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஏப்-201915:34:40 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் யார் என்று நினைக்கிறார்க்ளோ அவர்கள் தொடர்ந்து வெற்றி பெறட்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஏப்-201915:33:35 IST Report Abuse
இந்தியன் kumar ஆம் ஆத்மீ பிரிக்கும் வோட்டுக்கள் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்ற போதிலும் சிவசேனா பிரிக்கும் வோட்டுக்கள் சற்று மைனஸ் ஆக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
22-ஏப்-201909:00:38 IST Report Abuse
Ramakrishnan Natesan இப்படி தான் கோரக்பூரில் ஐந்து முறை வென்ற ஆதியயே பீதி கொள்ளுமளவுக்கு ஓடவிட்டார்கள் இதெல்லாம் எம்மாத்திரம் ரிசல்ட் வரட்டும் வந்தால் மஹாலக்ஸ்மி இல்லையேல் ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X