சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்பாசமுத்திரம் அருகே 40 கிராம் தாலிசெயின் பறிப்பு

Added : ஏப் 21, 2019
Advertisement

திருநெல்வேலி:மொபட்டில் சென்ற தாய், மகனை தாக்கி 40 கிராம் தாலிச்செயினை பறித்துச்சென்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த பொதிகாசலம் மனைவி இசக்கியம்மாள் 78, இவர் இன்று மாலையில் விக்கிரமசிங்கபுரம் சென்று விட்டு மகனுடன் மொபட்டில் பிரம்மதேசம் திரும்பிக்கொண்டிருந்தனர். அகஸ்தியர்பட்டி, பொன்நகர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தாய் மற்றும் மகனை தாக்கினர்.இசக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 40 கிராம் தாலிச்செயினை பறித்துக்கொண்டு தப்பினர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X