சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்காசி அருகே பெண் வெட்டி படுகொலை

Added : ஏப் 21, 2019
Advertisement

திருநெல்வேலி:தென்காசி அருகே சொத்துதகராறில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கணவர் படுகாயமுற்றார்.

திருநெல்வேலி, தென்காசியை அடுத்துள்ள பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் 58. மனைவி கோமு 52. இவர்கள் தென்காசி மார்க்கெட்டில் காய்கறிகடை நடத்திவருகின்றனர்.இன்று இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆசாத்நகரில் இருந்து பாட்டப்பத்து செல்லும் சாலையில் சென்றபோது, வழிமறித்த ஒரு நபர், சிதம்பரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தடுத்த அவரது மனைவி கோமுவிற்கும் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் கோமு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.

சிதம்பரம் நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர்களை அரிவாளால் வெட்டியது, சிதம்பரத்தின் உடன் பிறந்த தம்பி கணேசனின் மகன் கண்ணன் 23 என தெரியவந்தது. அவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.அதில் ஏற்பட்ட பகையில் சம்பவம் நடந்துள்ளது. கண்ணன் தப்பிஓடிவிட்டான். குற்றாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X