பொது செய்தி

தமிழ்நாடு

4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
இடைத்தேர்தல்,அதிமுக.,வேட்பாளர்,பெயர்,நாளை அறிவிப்பு:முதல்வர் இபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெயர்கள் நாளை(ஏப்.21) அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.
ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதி இடைத்தேர்தல் மே 19 ல் நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்கள் அ.தி.மு.க., சார்பில் பெறப்பட்டு, நேர்காணல் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமை வகித்தார். துணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., முன்னிலை வகித்தார்.
நேர்காணல் முடிந்த பின் இ.பி.எஸ்., தெரிவித்ததாவது:இலங்கையில் நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இந்தியா உதவ வேண்டும். இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர்கள் நாளை(ஏப்.21) ல் அறிவிக்கப்படும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-ஏப்-201901:54:43 IST Report Abuse
Girija சார் நான் சூலூரில் நிக்கறேனே? சீட் கொடுங்க சார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X