பதிவு செய்த நாள் :
116 தொகுதிகள்!
நாளை மூன்றாவது கட்டத் தேர்தல்
15 மாநிலங்களில் ஏற்பாடுகள் தீவிரம்

புதுடில்லி:இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 116 லோக்சபா தொகுதிகளுக்கு, நாளை ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம், நேற்று மாலை ஓய்ந்தது. ஓட்டுப் பதிவுக்கான விரிவான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் செய்துள்ளது. லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த, 11ம் தேதி, ஆந்திரா உட்பட, 20 மாநிலங்களில், 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து, 18ல், தமிழகம் உட்பட, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 95 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்தது.
தமிழகத்தின் வேலுார் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திரிபுராவின் ஒரு தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 13 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 116 தொகுதி களுக்கு, நாளை ஓட்டுப் பதிவு நடக்கிறது. பாதுகாப்பு பிரச்னையால், திரிபுராவின் ஒரு தொகுதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்தல், நாளை நடக்க உள்ளது.

ஓய்ந்தது

குஜராத், 26; கேரளா, 20; மஹாராஷ்டிரா மற்றும்

கர்நாடகா, தலா 14; உத்தர பிரதேசம், 10; சத்தீஸ்கர், ஏழு; ஒடிசா, ஆறு; பீஹார் மற்றும் மேற்கு வங்கம், தலா, ஐந்து; அசாம், நான்கு; கோவா, இரண்டு. ஜம்மு காஷ்மீர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டயூ மற்றும் திரிபுராவில், தலா ஒரு தொகுதிக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதையடுத்து, இந்த தொகுதிகளில், நேற்று மாலை யுடன் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தலை, நேர்மையாக வும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கான, அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் செய்துள்ளது.வரும், 29ல் நான்காம் கட்டத் தேர்தலும், மே, 6, 12, 19ல் அதற்கடுத்த கட்டத் தேர்தல்களும் நடக்க உள்ளன. வரும், மே, 23ல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சட்டசபை தேர்தல்

லோக்சபா தேர்தலுடன், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் சட்டசபை களுக் கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிமில், தேர்தல் முடிந்து விட்டது.ஒடிசாவில், நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு கட்டத் தேர்தல் அங்கு முடிந்துள்ளது.

நாளை நடக்கும் ஓட்டுப் பதிவின்போது, அங்கு, ஆறு லோக்சபா தொகுதிகளுடன், மொத்த முள்ள, 147 சட்டசபை தொகுதிகளில், 42 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

வாரணாசியில் பிரியங்கா!

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாக, காங்., தலைவர் ராகுலின்

Advertisement

சகோதரி, பிரியங்கா கூறியுள்ளார்.நாளை தேர்தலை சந்திக்கும், கேரளாவின் வயநாடு தொகுதியில், காங்., தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். இதைத் தவிர, உ.பி.,யின் அமேதி தொகுதியிலும், அவர் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின், உ.பி., கிழக்கு பகுதியின், பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள, ராகுலின் சகோதரி, பிரியங்கா, தீவிர பிரசாரத் தில் ஈடுபட்டு வருகிறார்.வயநாட்டில் நேற்று பிரசாரம் செய்த, பிரியங்கா கூறியதாவது: வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, நான் போட்டியிட வேண் டும் என, ராகுல் விரும்பினால், அவர் உத்தர விட்டால், போட்டியிடுவதற்கு தயாராக உள்ளேன். யார் வேட்பாளர் என்பதை, கட்சித் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

நாளை களம் காணும் தலைவர்கள்

காங்., தலைவர் ராகுல் போட்டியிடும், கேரளா வின் வயநாடு தொகுதியில், நாளை ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதேபோல், பா.ஜ., தலைவர், அமித் ஷா, குஜராத்தின் காந்திநகர் தொகுதி யில் போட்டியிடுகிறார்.கர்நாடகாவின், குல்பர்கா தொகுதியில், லோக்சபா, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், மத்திய அமைச்சர், அனந்த் குமார் ஹெக்டே, உத்தர கன்னடா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர், எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஷிவமொகா தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா, மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார். மஹாராஷ்டிரா வின் பாராமதியில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் மகள், சுப்ரியா சுலே போட்டியிடுகிறார்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
22-ஏப்-201918:28:27 IST Report Abuse

oceராஜீவ் மறைவை அடுத்து பிரதமராக வந்திருக்க வேண்டியவர் சோனியா. அவர் ஏன் வரவில்லை. அவர் வெளிநாட்டுக்காரர். அவர் தாத்தா இந்திராவின் கணவர் உள் நாட்டுக்காரரா. இதை எல்லாம் தேர்தல் ஆணையம் அலசி பார்க்க வேண்டும்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
22-ஏப்-201918:23:43 IST Report Abuse

oceபிள்ளைகளின் தேர்வுகளை பிட் பிட்டாகவா நடத்துகிறார்கள். அது தேர்வு. அதே முறை தேர்தலுக்கும் வரவேண்டும். வாக்கு சாவடி பாதுகாப்பில் எழும் சந்தேகங்கள் வராது.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201909:11:44 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎல்லா வாரிசுகளும் மோதுகிறதோ

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X