பதிவு செய்த நாள் :
நேரத்தை வீணடித்து விட்டது காங்.,
ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி:'கூட்டணி குறித்து பேசி, எங்கள் நேரத்தை காங்கிரஸ் வீணடித்து விட்டது' என, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி உள்ளது.

நேரத்தை ,வீணடித்து, விட்டது, காங்., ஆம் ஆத்மி ,பகிரங்க, குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர், கோபால் ராய், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டில்லி, ஹரியானா மாநிலங்களில் நடக்கும் லோக்சபா தேர்தலில், காங்.,குடன் கூட்டணி வைக்க, பேச்சு நடத்தப்பட்டது. அவர்கள் கூறிய நிபந்தனைகள் அனைத்தையும், ஏற்பதாக

அறிவித்தோம். ஆனாலும், காங்., பின்வாங்கி விட்டது. இதற்கு மேல், எங்களால் எதுவும் செய்ய முடியாது. காங்., உடனான கூட்டணி பேச்சு, முடிவுக்கு வந்து விட்டது. இதனால்,ஓட்டுகள் சிதறும்; அது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும்.


ஓட்டுகள் சிதறுவதை தான், காங்., விரும்புகிறது. எனவே, டில்லியில் மீதமுள்ள ஆறு லோக்சபா தொகுதிகளில், ஆம் ஆத்மி வேட்பாளர்கள், இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.டில்லியில் மொத்தம், ஏழு லோக்சபா தொகுதி உள்ளன. அனைத்திலும், ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகிறது.


மேற்கு டில்லியில் போட்டியிடும்ஆம் ஆத்மி வேட்பாளர் பல்பீர் சிங் ஜக்கார், சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.மேலும் உள்ள ஆறு வேட்பாளர்களின் பெயர்களை, ஆம் ஆத்மி கட்சி தலைமை நேற்று அறிவித்தது. ஹரியானாவில், ஜனநாயக ஜனதா கட்சியுடன், ஆம் ஆத்மி

Advertisement

கூட்டணி அமைத்து உள்ளது. இங்கு, ஜ.ஜ.க., ஏழு இடங்களிலும், ஆம் ஆத்மி மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றன.

டில்லி மற்றும் ஹரியானாவுக்கு, மே, 12ல் தேர்தல் நடக்கிறது. யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கு, கடைசி கட்டமாக, மே 19ல் தேர்தல் நடக்கிறது.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஏப்-201923:04:56 IST Report Abuse

Pugazh V"பதவிதான் உங்கள் குறி … மக்களே உஷார்"/ ஆமா.. பாஜக ஜெயிக்காது, ஜெயிச்சாலும் பதவிகளை குறி வைக்காது. பிற கட்சி களுக்கு குடுத்துடும். டெல்லி.மக்களை தமிழில் உஷார் பண்றாராம்.

Rate this:
Rameeparithi - Bangalore,இந்தியா
22-ஏப்-201912:38:29 IST Report Abuse

Rameeparithiபாம்பரையாக கொள்ளை அடுத்தவனை நேற்று பெய்ந்த மழையில் முளைத்தவன் நம்பினால் இது தான் நடக்கும்குற்ற பத்திரிகை வாசிக்கும் போது இருந்த கோபம் கூட்டணி வைக்கும் ஆசையில் எங்கே போனது? எல்லாம் பதவிதான் உங்கள் குறி … மக்களே உஷார் .

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
22-ஏப்-201912:05:50 IST Report Abuse

ganapati sbதொடர்ந்து 15 ஆண்டு ஆட்சி செய்த தில்லி காங்கிரஸ்மீது ஊழல் புகார் கூறி வென்று பின் ஒரு விசாரணை நடவடிக்கையும் கூட எடுக்காமல் கூட்டணிக்கு பேரம் பேசும் ஆம் ஆத்மி ஊழலை ஒழிக்கும் இனி யாரும் நம்ப மாட்டார்கள் மாற்று அரசியல் நினைத்து ஏமாத்தவர்களில் நானும் ஒருவன்

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X