பதிவு செய்த நாள் :
என் மகனின் சட்டையை கிழித்து எறியுங்கள்!
ம.பி., முதல்வர் கமல்நாத் திடீர் அறிவிப்பு

சிந்த்வாரா:''லோக்சபா தேர்தலில், என் மகன் வெற்றி பெற்று, வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால், அவன் சட்டையை கிழித்து எறியுங்கள்,'' என, காங்., மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான, கமல்நாத் கூறினார்.

 என் மகனின், சட்டையை ,கிழித்து,எறியுங்கள்!, ம.பி.,முதல்வர் கமல்நாத், திடீர், அறிவிப்பு

ம.பி.,யில், ஏப்., 29ல் துவங்கி, மே, 19 வரை, நான்கு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இங்குள்ள சிந்த்வாரா லோக்சபா தொகுதியில், காங்., மூத்த தலைவரும், ம.பி.,

முதல்வருமான கமல்நாத்தின் மகன், நகுல் போட்டியிடுகிறார்.நேற்று, அங்கு நடந்த பிரசார கூட்டத்தில், தன் மகனை ஆதரித்து,கமல்நாத் பேசியதாவது:

சிந்த்வாரா தொகுதி மக்களுக்காக பணியாற்றுவதற் காக, என் மகனை களம் இறக்கி உள்ளேன். இனி, உங்கள் நலனுக்காக உழைப்பதே, அவன் பணி; அதை, அவன் சரியாக செய்யா விட்டால், அவன் சட்டையை கிழித்து எறியுங்கள். லோக்சபா தேர்தலில்,எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. காங்., நிறைய இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை கிடைக்குமா என்பது சந்தேகமே.

தேர்தல் முடிவுகளுக்கு பின், ஒரு கூட்டணி உருவாகும். அந்த கூட்டணி தான், மத்தியில்

Advertisement

ஆட்சியை முடிவு செய்யும்.பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காது; அவர்களுடன் கூட்டணி வைக்க, எந்த கட்சியும் தயாராக இல்லை. இந்நிலையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையில், கூட்டணி ஆட்சி அமையும். பிரதமர் பொறுப்பை ராகுல் ஏற்பார்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
22-ஏப்-201921:46:24 IST Report Abuse

balஇந்த ஆளே ஒரு கொலைகாரர்...1984 வன்முறையை தூண்டியவர்

Rate this:
bal - chennai,இந்தியா
22-ஏப்-201921:45:21 IST Report Abuse

balசட்டையை கிழிப்பதில் இங்கு சுடலை என்ற வல்லவர் இருக்கிறார் உங்கள் கூட்டணிக்காரர்தான்.

Rate this:
bal - chennai,இந்தியா
22-ஏப்-201921:44:49 IST Report Abuse

balவிவசாய கடன் தள்ளுபடி வெற்றி பெற்ற பத்து நாளில் என்று சொன்ன நாற வாய் இது...இதனுடைய எதை கிழிப்பது...

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X