பதிவு செய்த நாள் :
பா.ஜ., சர்ச்சை பெண் சாமியாருக்கு
தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்'

போபால்:மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரான, சர்ச்சைக்குரிய பெண் சாமியார், சாத்வி பிரக்யா சிங் தாக்குருக்கு, அயோத்தி குறித்து பேசியதற்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

பா.ஜ.,சர்ச்சை,பெண் சாமியாருக்கு,தேர்தல்,ஆணையம்,'நோட்டீஸ்'

மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 29 தொகுதிகளுக்கு, வரும், 29ம் தேதி முதல், நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.போபால் தொகுதியின், பா.ஜ., வேட்பாளராக, சர்ச்சைக்குரிய, பெண் சாமியார், சாத்வி பிரக்யா சிங் தாக்குர் நிறுத்தப்பட்டு உள்ளார்.

மஹாராஷ்டிராவின் மாலோகனில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், இவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது, ஜாமினில்

உள்ளார்.ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, சிக்கலில் மாட்டியுள்ளார். சமீபத்தில், 'என் சாபத்தினால்தான், மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர், ஹேமந்த் கர்கரே, சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்தார்' என,கூறினார்.

இது குறித்து விளக்கம் கேட்டு, பிரக்யாவுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், 'உ.பி., மாநிலம், அயோத்தியில், பாபர் மசூதியை இடித்ததில், நானும் பங்கேற்றேன். மசூதியின் மீது ஏறி, அதை உடைத்தேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன்' என, அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, இது குறித்து விளக்கம் கேட்டு, போபால் மாவட்ட தேர்தல் அதிகாரியான, மாவட்ட கலெக்டர், சுதாம் காதே, நேற்று முன்தினம், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளார்.


இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில், பிரக்யாகூறியதாவது: என் கருத்தில் உறுதியாக உள்ளேன். நடந்ததைதான் கூறியுள்ளேன். அயோத்தியில் ராமர் கோவில் கண்டிப்பாக கட்டப் படும். தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு, சட்ட ரீதியில் தகுந்த பதில் அளிக்கப்படும். இவ்வாறு,

Advertisement

அவர் கூறினார்.முன்னாள் கிரிக்கெட் வீரரான, காங்.,கைச் சேர்ந்த, பஞ்சாப் மாநில அமைச்சர், நவ்ஜோத் சிங் சித்து, சமீபத்தில், பீஹாரில் பிரசாரம் செய்தார். அப்போது, 'இங்கு முஸ்லிம் கள், 64 சதவீதம் பேர் உள்ளனர்; ஆனால், உங்களை சிறுபான்மையினர் என்கின்றனர். உங்களது சக்தியை பயன் படுத்தி, பிரதமர் மோடிக்கு தோல்வியை தர வேண்டும்' என, அவர் பேசி உள்ளார்.


இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சித்துவுக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, பீஹாரில், ஏற்கனவே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
22-ஏப்-201918:08:15 IST Report Abuse

Ab Cdபிஜேபி இது போன்ற தீவிரவாதிகளுக்கு சீட் கொடுத்துவிட்டு, தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று சொல்வது வெட்க கேடானது

Rate this:
oce - chennai,இந்தியா
22-ஏப்-201917:37:17 IST Report Abuse

oceஆதி காலந்தொட்டு மதம் ஜாதி என்று சொல்லி மக்களை தூண்டி அரசியல் செய்தார்கள். இப்போது சிறுபான்மை என்று சொல்லி மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள். முதலில் காங்கிரஸ்காரன் சித்துவை பிடித்து உள்ளே வையுங்கள்.

Rate this:
oce - chennai,இந்தியா
22-ஏப்-201917:31:35 IST Report Abuse

oceமுதலில் சிறு பான்மையினர் என்ற தகுதியை முஸ்லீம் களுக்கும் கிறித்துவர்களுக்கும் தாரை வார்த்தவன் காங்கிரஸ்காரன்.. இப்போது சிறுபான்மைகள் அனைத்தும் பெரும்பான்மையாகி தேர்தலில் இந்துக்களை மிரட்டும் நிலைக்கு வந்து விட்டனர். இது இந்துக்களுக்கு காலப் போக்கில் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். பாஜக சிறு பான்மை என்ற தகுதியை அறவே நீக்க வேண்டும். இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்தியர்களே. அதில் இந்த மாதிரி ஆட்களை மத அடிப்படையில் எதற்கு பிரித்து வைக்க வேண்டும்.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X