பதிவு செய்த நாள் :
அபிநந்தன் விடுவிக்கப்பட்டது எப்படி:
மோடி பரபரப்பு தகவல்

படான்:''கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அண்டை நாடான, பாகிஸ்தானை எச்சரித்தோம். அதனால் தான், நம் விமானப் படை விமானி, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்,'' என, குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 அபிநந்தன்,விடுவிக்கப்பட்டது,எப்படி, மோடி,பரபரப்பு, தகவல்

பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை, நம் விமானப் படை தாக்கி அழித்தது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் போர் விமானங்கள், நம் எல்லைக்குள் நுழைய முயன்றன; அதை நம், விமானப்படை முறியடித்தது.

அப்போது நடந்த மோதலில், நம் விமானப்படை விமானி, விங் கமாண்டர், அபிநந்தன் வர்த்தமான், பாக்., ராணுவத்திடம் சிக்கினார்; பின் விடுவிக்கப் பட்டார்.விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக, தேர்தல் பிரசாரத்தில் பேசுவதற்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.


இந்நிலை யில், குஜராத்தில் உள்ள, 26 லோக்சபா தொகுதி களுக்கு நாளை ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. பிரசாரத்துக்கு கடைசி நாளான நேற்று, பல்தானில் நடந்த, பா.ஜ.,

பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தான் பிடியில், நம் விமானப்படை விமானி, அபிநந்தன் சிக்கினார். அப்போது இது குறித்து நான் பதிலளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தின.'அபிநந்தனை உடனடியாக விடுவிக்கா விட்டால், மோடி இதை செய்து விட்டார் என நீங்கள் புலம்பும் நிலை ஏற்படும்'என, பாகிஸ்தானை எச்சரித்தோம்.அதற்கடுத்த நாள், அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

'மோடி, 12 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளார். தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவு ஏற்படும்' என, அந்த அதிகாரி எச்சரித்தார். அதைத் தொடர்ந்தே, அபிநந்தனை விடுவிப்பதாக, பாகிஸ்தான் அரசு அறிவித்தது.இது குறித்து நான் ஏதும் பேசவில்லை. அமெரிக்க அதிகாரி கூறியதை தான் இங்கு குறிப்பிடுகிறேன்.நான் அடுத்தது என்ன செய்வேன் என்பதை புரிந்து கொள்ள முடிய வில்லை என, தேசியவாத காங்., தலைவர், சரத் பவார் கூறியுள்ளார்.

இங்குள்ள அவராலேயே, என்னை புரிந்துக் கொள்ள முடியாதபோது, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கானால் எப்படி கணிக்க முடியும்?கடந்த தேர்தலில், இங்குள்ள, 26 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற் றியை அளித்தீர்கள். அதுபோல, இந்த தேர்தலிலும், உங்களுக்காக டில்லியில் உள்ள எனக்கு உதவ, 26 பேரை அனுப்பி வைக்க வேண்டும்.

பா.ஜ., அரசு மீண்டும் அமைவது உறுதி.ஆனால்,

Advertisement

இங்கு, 26 தொகுதிகளிலும் வெற்றி தரவில்லை என்றால், மே, 23ல் அது குறித்தே, 'டிவி' க்களில் விவாதம் நடக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

''பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள்,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது: இலங்கையில், பயங்கரவாத தாக்குதலால், நுாற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலி யாகி உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில், இலங்கைக்கு எந்த உதவியையும் அளிக்க, இந்தியா துணை நிற்கும்.

மக்கள் ஓட்டளிக்க, பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை அழுத்தினால், அது பயங்கர வாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை. அது உங்களின், விரல் முனையில் உள்ளது. பாக்., மிரட்டல்களுக்கு, இந்தியா பயப்படாது. அணுகுண்டு வைத்திருப்பதாக அந்நாடு கூறி வருகிறது. இந்தியாவில், தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டு வைத்திருக்கிறோம்? இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201900:13:18 IST Report Abuse

RMpaara! Daddy story super!

Rate this:
Suri - Chennai,இந்தியா
22-ஏப்-201919:49:30 IST Report Abuse

Suriஇராணுவத்தை பற்றி, நாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தம்பட்டம் அடிப்பது தேர்தல் கமிஷனுக்கு தெரியாதா? அபிநந்தன் தயவு இல்லாமல் ஓட்டு கேட்க வக்கற்ற ஆளுக்க்கா ஓட்டு போடுவார்கள் மக்கள் ??

Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
22-ஏப்-201918:42:19 IST Report Abuse

Ab Cd

Rate this:
மேலும் 72 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X