அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த பெண் தாசில்தார்

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 ஓட்டு எண்ணிக்கை மையத்தில்  நுழைந்த பெண் தாசில்தார்

மதுரை : மதுரை அரசு மருத்துவ கல்லுாரி, ஓட்டு எண்ணிக்கை மையத்தில், அனுமதியின்றி நுழைந்த பெண் தாசில்தார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.மதுரை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டு இயந்திரங்கள், மருத்துவக் கல்லுாரி மையத்தில், சட்டசபை தொகுதிகள் வாரியாக வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், இம்மையத்தில், உதவி தேர்தல் அதிகாரியான, பெண் தாசில்தார் சம்பூர்ணம் நுழைத்து, ஆவணங்களை எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.
இதை கண்டித்து, மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அ.ம.மு.க., வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் கட்சியினர், மருத்துவ கல்லுாரியை, நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன், டி.ஆர்.ஓ., குணாளன் பேச்சு நடத்தினர். 'அனுமதியின்றி நுழைந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கட்சியினர் வலியுறுத்தினர்.தேர்தல் ஆணையத் துக்கு அனுப்ப, மேற்கு தொகுதி ஓட்டுப்பதிவு குறித்த ஆணவங்களை, ஜெராக்ஸ் எடுக்க, ஆவணங்கள் வைக்கப்பட்ட அறைக்கு மட்டுமே சென்றதாகவும், ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் செல்லவில்லை எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் அனுமதி பெறாமலும், அரசியல் கட்சி ஏஜன்ட் இல்லாமலும் கவனக்குறைவாக சென்றதற்காக, சம்பூரணத்தை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் உத்தரவிட்டார்.சம்பூர்ணம், மதுரை கலால் துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக உள்ளார். துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலில், இவர் பெயர் முதலிடத்தில் உள்ளது.அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யன் கூறுகையில், ''அனுமதியின்றி, ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு, பெண் அதிகாரி சென்றது தவறு. இதை கண்டித்து, போராட்டம் என்ற பெயரில் திசை திருப்புவதையும் ஏற்க இயலாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201909:13:20 IST Report Abuse
Srinivasan Kannaiya பெண்புத்தி பின் புத்தி
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
22-ஏப்-201907:07:13 IST Report Abuse
natarajan s இது ஒரு procedural lapse தான். வேற உள்நோக்கம் இல்லை இதை வேண்டும் என்றே கம்மிகள் பெரிது படுத்தி விளம்பரம் தேடுகிறார்கள். நாளைக்கு தேர்தல் வழக்கில் இதையே Premise ஆக கொண்டுசெல்ல முயற்சி செய்யலாம்.அதுதான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
22-ஏப்-201906:16:36 IST Report Abuse
Giridharan S பாவம் இந்த கிழவி. தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டுள்ளார். அனுபவம் வாய்ந்த இந்த அலுவலர் எப்படி இதை செய்தார் என்பது தான் கேள்வி. புகைப்பட நகல் எதற்கு எடுக்க சென்றார் அதுவும் இதை அவரே செய்திருக்க வாய்ப்பில்லை. உயர் அலுவலர் சொல்லாமல் செய்திருக்கவும் முடியாது. விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும், காரணம் "அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யன் கூறுகையில், ''அனுமதியின்றி, ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு, பெண் அதிகாரி சென்றது தவறு. இதை கண்டித்து, போராட்டம் என்ற பெயரில் திசை திருப்புவதையும் ஏற்க இயலாது,'' என்றார்." இதுதான் உதைக்குது எப்படியோ இந்த கிழவிக்கு துணை ஆட்சியர் பதவி ஊஊஊஊ..........தான். .
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
22-ஏப்-201913:59:18 IST Report Abuse
Girijaவீழ்ந்தாரை கண்டால் வாய்விட்டு சிரிக்கும், வாழ்ந்தாரை கண்டால் மனதிற்குள் வெறுக்கும், பண்பாடு இன்றி பாதகம் செய்யும். நீங்கள் விரும்பியது போல் ஊ ஊ ஆனால் உங்கள் வயிறு ரொம்பி இனிமேல் உங்களுக்கு பசியே எடுக்காதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X