சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம், பொருட்கள் பறிமுதல்: தமிழகம் தொடர்ந்து முதலிடம்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 பணம், பொருட்கள் ,பறிமுதல்,தமிழகம், தொடர்ந்து ,முதலிடம்

சென்னை : தேசிய அளவில், பணம் மற்றும் பொருட்கள் பறிமுதலில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து மாநிலங்களிலும், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடைபெறுகிறது. சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும், பணம், தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் கடத்தல் பொருட்கள், பறிமுதல் செய்யப்படுகின்றன.நேற்று வரை, நாடு முழுவதும், 725 கோடி ரூபாய் ரொக்கம்; 232.62 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 1,168.54 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், 936 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கம், வெள்ளி பொருட்கள், 46.56 கோடி ரூபாய் மதிப்புள்ள இதர பொருட்கள் என, மொத்தம், 3,108.86 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், பணம் மற்றும் பொருட்கள் பறிமுதலில், தமிழகம், தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில், 213.18 கோடி ரூபாய் ரொக்கம்; 2,403 கிலோ தங்கம்; 645 கிலோ வெள்ளி என, மொத்தம், 933.94 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பணம், பொருட்கள் பறிமுதலில், குஜராத் மாநிலம், இரண்டாமிடத்தில் உள்ளது. இங்கு, 545 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில், 524.34 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருட்களும் அடங்கும் .தமிழகத்தில், இன்னும், நான்கு சட்டசபை தொகுதி களுக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே, பறிமுதல் பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு, இன்னும் உயர வாய்ப்பு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
22-ஏப்-201919:02:34 IST Report Abuse
Gopi ஏழை தமிழகம், ஏழை தலைவர்கள்,பணக்கார மக்கள்
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
22-ஏப்-201917:26:09 IST Report Abuse
venkatan அரசர்களின் சன்மானம் குடிகளுக்கு சென்று அடைவதில் என்ன தவறு.எசமான் கொடுக்கிறான்:அடிமைகள் வாங்கிக்கொள்கிறார்கள். இதிலும் என்ன தப்பு.?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஏப்-201916:53:32 IST Report Abuse
Endrum Indian இதில் எல்லாம் டாஸ்மாக் நாடு தான் முதலிடம், தமிழகம் என்று இருந்திருந்தால் கடைசி இடத்தில் தான் இருந்திருக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X