அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பில் கவனம்
தொண்டர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:'தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஓட்டு எண்ணும் மையங்களில் விழிப்புணர்வுடன் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்திட வேண்டும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 ஓட்டுப்பதிவு,இயந்திர,பாதுகாப்பில்,கவனம்,தொண்டர்களுக்கு ஸ்டாலின்,வலியுறுத்தல்

அவரது அறிக்கை:

மதுரை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்திற்குள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாலை 3:00 மணிக்கு நுழைந்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே


முறைகேடு கள் செய்வதில் ஈடுபட்டுள்ளனர்; இது அதிர்ச்சி அளிக்கிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீலிடப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் உள்ளனர்.


இந்நிலையில் அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததும் முறைகேடுகள் செய்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் தலைமை தேர்தல் அதிகாரியால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் அதிகாரிகள் அனைவரும் ஆளும் கட்சி யின் கைப்பாவைகளாக மாறி இருப்பது நேர்மை யானதேர்தலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு ஒரு மாதத்திற்கு மேல் உள்ளது. அதுவரை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

எனவே அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும்

Advertisement

துணை ராணுவத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். அதிகாலை ஓட்டு எண்ணும் மையத்திற்குள் நுழைந்தவர்கள் மீதும் அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இரவு பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாது காக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-ஏப்-201904:25:24 IST Report Abuse

meenakshisundaramவேணுன்னா கோபாலபுரத்தில் வீட்டுலே கொண்டு வைக்க சொல்லி ஆளுநரிடம் மனு கொடுக்கலாமா? பொது குழுவை கூட்டி முடிவெடுக்க.

Rate this:
BJPKAARAN - Coimbatore,இந்தியா
22-ஏப்-201918:20:18 IST Report Abuse

BJPKAARANஐயா நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தால் போதும். நீங்கள் எது சொன்னாலும் அதில் ஒரு உள்குத்து இருக்கும், அப்படி ஒன்றும் இதில் இல்லையே? பாவம் மக்கள் பயந்துவிடப்போகிறார்கள்.

Rate this:
oce - chennai,இந்தியா
22-ஏப்-201918:06:08 IST Report Abuse

oceஉன் ஆட்கள் வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து வாக்குப் பெட்டிகளை திருடி சென்ற போது இந்த மாதிரி அறிக்கையை விடவில்லையே. அந்த பெண் தாசில் தாரும் அவருடன் சென்ற அரசு ஊழியர்களும் திமுக அனுதாபிகள் என்று ஏன் கருதக்கூடாது. அதை மறைப்பதற்கு இப்படி திசை திருப்பும் நோக்கில் அறிக்களை வெளியிடலாமா.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X