பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வாக்காளர்கள் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (6)
Advertisement
சென்னை வாக்காளர்கள் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

ரேஷனில், பொங்கல் பரிசுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வாங்க ஆர்வம் காட்டிய சென்னைவாசிகள், லோக்சபா தேர்தலுக்கு, ஓட்டு போட வராதது, சமூக ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாவட்டத்தில், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என, மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன.ரேஷன் கார்டு வழங்கும், உணவு வழங்கல் துறை, சென்னையில், மூன்று லோக்சபா தொகுதிகளையும் உள்ளடக்கி, வட சென்னை, தென் சென்னை என, இரு மாவட்டங்களாக செயல்படுகின்றன.பொங்கல் பரிசுஅதன்படி, வட சென்னையில், 10.63 லட்சம்; தென் சென்னையில், 9.40 லட்சம் என, சென்னையில் மொத்தம், 20.03 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில், 68.20 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, பருப்பு, உலர் திராட்சை; 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கியது.சென்னையில், ரேஷன் கார்டுதாரர்கள், அதிகாலை, 4:00 மணிக்கு, ரேஷன் கடைகள் முன் வந்து, வரிசையில் காத்திருந்து, பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.சென்னையில் வசிக்கும், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், பணத்தை வாங்கிய பின் தான் சென்றனர்.இதையடுத்து, சென்னையில் உள்ள, மொத்த ரேஷன் கார்டுதாரர்களில், 98 சதவீதம் பேர், பொங்கல் பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கத்தை வாங்கினர். லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, இம்மாதம், 18ல் நடந்தது.ஓட்டுப்பதிவுவட சென்னையில், 14.87 லட்சம்; மத்திய சென்னையில், 13.32 லட்சம்; தென் சென்னையில், 18.08 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். மற்ற தொகுதிகளை விட, வட சென்னையில், 63.65 சதவீதம்; மத்திய சென்னையில், 59.56 சதவீதம்; தென் சென்னையில், 56.41 சதவீதம் என, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.படித்தவர்கள், வசதியானவர்கள், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அருகில் வீடு என, அனைத்து சிறப்பும் உடைய சென்னைவாசிகள், 1,000 ரூபாய் வாங்க காட்டிய ஆர்வத்தை, ஓட்டளிக்க காட்டவில்லை என்ற ஆதங்கம், சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது.ரேஷன் கார்டுஇது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின், ஆதார் விபரத்தின் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஒரே நபர், மற்ற இடங்களில், ரேஷன் கார்டு வாங்க முடியாது; உறுப்பினராகவும் சேர முடியாது.சென்னையில், குறிப்பாக, தென் சென்னை, வட சென்னையில், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான், அதிகம் வசிக்கின்றனர்.தவிர்க்கலாம்அவர்கள், சொந்த ஊரில் ஒன்று; தற்போது உள்ள முகவரியில் ஒன்று என, இரண்டு ரேஷன் கார்டுகள் வைத்திருந்தனர். ஆதார் எண் அடிப்படையில், ரேஷன் கார்டு வழங்கியதும், சென்னையில் மட்டும், அதை வாங்கினர்.அதை பயன்படுத்தி, சென்னையில், பொங்கல் பரிசு பொருட்கள் வாங்கினர். அதேபோல், ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைத்தால், ஒரே நபர், இரு இடங்களில், வாக்காளர் அட்டையை வைத்திருக்க முடியாது.தேர்தலுக்கு என, ஓட்டளிக்க சொந்த ஊர் செல்வதை தவிர்க்கலாம்; சென்னையில் ஓட்டளிப்பர். இதற்கான நடவடிக்கையை, தேர்தல் ஆணையம் தான் எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஏப்-201914:40:50 IST Report Abuse
ஆப்பு சமூக ஆர்வலர்களா? யாரு இவிங்க? பொங்கல் சீர்வரிசை எல்லோருக்குமா குடுத்தார்கள்? மத்தியதர மக்களிடமிருந்து புடுங்கி ஏழைகளுக்கு குடுப்பாங்க... அவிங்க போடு ஓட்டில் வெற்றி பெற்று திரும்ப நடுத்தட்டு மக்களிடம் திரும்ப உருவுவாங்க. எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் இதே கதைதான்.
Rate this:
Share this comment
Cancel
22-ஏப்-201914:37:39 IST Report Abuse
ஆப்பு ஓட்டுப் போட்டாத்தான் பரிசுப் பொருள்னு சொல்லியிருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201914:29:05 IST Report Abuse
SELF பொங்கலுக்கு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும். குறுக்கு வழியில் ஓட்டை அள்ளிவிடலாம் என்று ஆயிரம் ரூபாய் அரசாங்கம் கொடுத்தது இப்போது வீணாகிப் போய் விட்டது. இப்போது புரிகிறதா பணக்காரர்கள் பணம் வாங்குவதற்கு மட்டும் வரிசையில் வந்து நிற்பார்கள் ஆனால் ஓட்டுப் போடுவதற்கு அவர்களால் வரமுடியாது. பணம் வாங்கியவர்களில் யார் யார் ஓட்டுப்போட வரவில்லை என்று கண்டுபிடித்து ரேஷன் கார்டு கேன்சல் செய்யுங்கள். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X