ரோடக் தொகுதியில் ஹூடா குடும்ப ஆதிக்கம் காலி?

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement

மே 12ல், லோக்சபா தேர்தலை சந்திக்கும், ஹரியானா மாநிலத்தின், 10 லோக்சபா தொகுதிகளில், வாரிசு அரசியல் பீடமாக விளங்கும் ரோடக், அந்த மாநிலத்தின் நட்சத்திர தொகுதியாக விளங்குகிறது. மேலும் அது, காங்கிரசின் செல்லத் தொகுதியாக, இப்போது வரை விளங்குகிறது; அது, இந்த முறை மாறும் என, நம்பப்படுகிறது.


அந்த தொகுதியின், இப்போதைய, காங்கிரஸ் எம்.பி., தீபிந்தர் ஹூடா, 2005, 2009 மற்றும் 2014 லோக்சபா தேர்தல்களில் தொடர்ந்து வென்று, சாதனை படைத்துள்ளார். அதற்கு முன், பல முறை அந்த தொகுதி, ஹூடா குடும் பத்தின் தொகுதியாகவே இருந்துள்ளது. இதுவரை, 17 லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ள இந்த தொகுதி, ஒன்பது முறை, ஹூடா குடும்பத்தின் சொத்தாகவே இருந்துள்ளது; அந்த ஒன்பது முறையும், ஹூடா குடும்பத்தினரே, இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜாட் இனத்தின் முக்கிய தலைவராக பார்க்கப்படும், காங்கிரசை சேர்ந்த, ரன்பிர் சிங் ஹூடா, இந்த தொகுதியிலிருந்து, 1952 மற்றும் 1957ல் வெற்றி பெற்று, தொகுதியை தன் குடும்ப சொத்தாக்கினார். அவருக்கு பின் அவர் மகன், பூபிந்தர் சிங் ஹூடா, நான்கு முறை, எம்.பி.,யாகியுள்ளார். தீபிந்தரின் தாத்தா, ரன்பிர் சிங் ஹூடா, ஜாட் இனத்தின் பிரசித்தி பெற்ற தலைவர். அதே ஜாதியை சேர்ந்த, முன்னாள் துணை பிரதமர், இந்திய தேசிய லோக்தளத்தின் தலைவர், தேவி லாலை, இந்த தொகுதியில் மண்ணை கவ்வ வைத்தவர்.

ஹரியானா மாநிலத்தின், தலைநகராக சண்டிகர் விளங்கினாலும், பூகோள ரீதியிலும், அதிகார மையத்திலும், ரோடக் தான், ஹரியானாவின் தலைநகராக பார்க்கப்படுகிறது. தலைநகர் டில்லியிலிருந்து, 70 கி.மீ.,யில் உள்ள இங்கு, பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்கள், ஜவுளி தொழிற்சாலைகள், கால்நடை பண்ணைகள் உள்ளன.ஹூடா குடும்ப சொத்தாக விளங்கும் ரோடக் தொகுதியில் இந்த முறை, அந்த குடும்பத்தின் வெற்றி எளிதாக இருக்காது என, கருத்து நிலவுகிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த, மனோகர் லால் கட்டார், முதல்வராக உள்ள இந்த மாநிலத்தில், பா.ஜ.,வின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் செயல் திட்டங்கள், ஹூடா குடும்ப ஆதிக்கத்தை, ரோடக் தொகுதியில் செல்லரித்து போகச் செய்யும் என, நம்பப்படுகிறது.

காங்கிரஸ் சார்பில் மீண்டும், தற்போதைய எம்.பி., தீபிந்தர் சிங்கே, ரோடக்கில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், அரவிந்த் சர்மா நிற்கிறார். காங்கிரஸ் பெரும் தலையாக இருந்த இவர், சமீபத்தில் அங்கிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். அவரை கவுரவிக்கும் வகையில், அந்த தொகுதியில், பா.ஜ., நிறுத்தியுள்ளது. சர்மா, பிராமணர் ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும், ஹூடா குடும்பத்தை எதிர்க்க தகுதியான நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன், சோனேபட் மற்றும் கர்னால் லோக்சபா தொகுதிகளில், ஜாட் இன மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து, மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால், இந்த முறை, ரோடக்கையும் அவர் ஒரு கை பார்ப்பார் என, நம்பப்படுகிறது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், கர்னால் தொகுதியில் போட்டியிட்ட இவரை, பா.ஜ.,வின், அஷ்வினிகுமார் சோப்ரா தோற்கடித்தார். ஜாதி பெருமை பேசி, அவ்வப்போது கலவரத்திற்கு காரணமாக இருக்கும் ஜாட் இன மக்களை தவிர்த்து, பிராமணர்கள், பனியர்கள், பஞ்சாபியர்கள், ராஜ்புத், அஹிர், சைனி, எஸ்.சி., பிரிவினரின் ஓட்டுகளை, அரவிந்த் சர்மா பெறுவார் என, கருதப்படுகிறது. அதற்கான, ஒருங்கிணைப்பு பணியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது.அதுபோல, ஜாட் இனத்தவரின் ஓட்டு வங்கியாக கருதப்படும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி உடைந்துள்ளதாலும், ஜனநாயக ஜனதா கட்சி என்ற கட்சி உருவாகியுள்ளதாலும், ஹூடா குடும்பத்தினரின் ஆதிக்கம், ரோடக் தொகுதியில் இந்த முறை செல்லாது என, இந்த தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

- ஸ்மிருதி சர்மா-
சிறப்பு செய்தியாளர்

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஏப்-201915:07:10 IST Report Abuse
இந்தியன் kumar நல்லாட்சி செய்தால் யாரையும் வீழ்த்தலாம்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஏப்-201915:06:00 IST Report Abuse
இந்தியன் kumar மக்கள் பரம்பரை அரசியல்வாதிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அரசியல் ஒன்றும் குடும்ப சொத்து அல்ல
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201907:59:55 IST Report Abuse
Srinivasan Kannaiya மத்திய அரசின் செயல் திட்டங்கள், ஹூடா குடும்ப ஆதிக்கத்தை, ரோடக் தொகுதியில் செல்லரித்து போகச் செய்யும்,,, என்னமோ நலத்திட்டங்கள் என்று சொல்லறீங்களே அது என்னாப்பா
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-ஏப்-201909:27:15 IST Report Abuse
Chowkidar NandaIndiaஎத்தனை நலத்திட்டங்கள், நன்மைகள் செய்தாலும் உங்களை போன்றவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கவே செய்வீர்கள். மொத்தத்தில் கான்க்ராஸ் போல் விதவிதமாக ஊழல் செய்யாமல், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதே இந்த அரசின் சாதனை என்று சொன்னால் அது மிகையாகாது....
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
22-ஏப்-201911:10:05 IST Report Abuse
Sathya Dhara கான் கிராஸ் கூட்டத்தை ஊழல் என்று சொன்னால் போதாது. துரோகிகள்....அமைதி மார்க்கம் அன்பு மார்க்கம் என்ற இரண்டு கும்பலிடமும் ஹிந்துக்களை காட்டிக்கொடுத்து பதவி வெறி பிடித்து இந்த நாட்டை வாடிகனுக்கு அடகு வைத்து.....அரசியல் செய்த அசிங்கமான ....அருவருப்பான சாக்கடை செப்டிக் தொட்டி கான் கிராஸ் ....என்று சொல்லுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X