பீஹாரில் மெகா கூட்டணியில் குழப்பம்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement

பீஹாரில், மதுபானி தொகுதியில், கூட்டணி குழப்பத்தால், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.






பீஹாரில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், மதுபானி தொகுதியில், 10 ஆண்டுகளாக, பா.ஜ., - எம்.பி., சவுத்ரி ஹுகும்தியோ நாராயண் யாதவ் வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை, இவரது மகன், அசோக் யாதவ் போட்டியிடுகிறார். இவர், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார்.

எதிர் அணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், 'விகாஷ்ஷில் இன்சான்' கட்சி உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்துள்ளன. இதன் சார்பில், இன்சான் கட்சி, பத்ரிநாத் பர்வே போட்டியிடுகிறார். இதற்கு, காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.,யில் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரசின், முன்னாள், மத்திய அமைச்சர், ஷகில் அஹமது கட்சியில் இருந்து வெளியேறி, சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஆர்.ஜே.டி.,யின் முக்கிய தலைவரான அலி அஷ்ரப் பத்மி, அக்கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி வேட்பாளராகியுள்ளார்.





இந்த இரண்டு வேட்பாளர்களும், முஸ்லிம்களின் ஓட்டுகளை பிரிக்க உள்ளனர். அதனால், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு, வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. மெகா கூட்டணிக்கு வர வேண்டிய, சிறுபான்மை ஓட்டுகள் மட்டும் பிரிந்தால் போதும் என, பா.ஜ., கணக்கு போட்டுள்ளது. இதை சமாளிக்க முடியாமல், மெகா கூட்டணியில் உள்ள கட்சிகள் திணறி வருகின்றன.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
22-ஏப்-201911:38:07 IST Report Abuse
Indhuindian கூட்டில் குஷம்பு நல்ல செய்தி. கூட்டில் குஷாம்புதான் வரும் வேறென்ன பாயாசமா வரும்
Rate this:
Share this comment
Cancel
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
22-ஏப்-201908:35:39 IST Report Abuse
Yes your honor மதுபானி இதன் அருகிலுள்ள சீதாமரி இரண்டும் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகள். மேலும், சீதாமரியைச் சுற்றிலும் காடுகள் நிறைந்த பகுதியாகும். இவ் வனப்பகுதிகளில்தான் நக்ஸல்கள் மிகவும் அதிகம். நானும் எனது நண்பரும் இவ்வனப்பகுதியின் வழியாக ஒருமுறை பயணம் செய்ய நேரிட்டபொழுது நான் இன் சர்ட் செய்துகொண்டு கழுத்தில் டை அணிந்திருந்தேன். வனப்பகுதி துவங்கியவுடன் என் நண்பர், என்னை ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு, 'ஸோ, இன்னைக்கு காட்டுக்குள்ள தான் நீ டின்னர் சாப்பிடப்போரே, அதுவும் ஒரு கெஸ்டா' என்று கூறிவிட்டு, 'உன் மனைவி போன் நம்பர், ஃபிரண்டுது, முடிஞ்சா உன் வக்கீலுது என ஏதாவது நம்பர் இருந்தா சொல்லு, எதுக்கும் தேவைப்படலாம்' என கூறினார். எனக்கு முக்கால் பகுதி புரிந்துவிட்டது. வனம் துவங்கிவிட்டதா என்று கேட்டேன். ஆம் என்று தலையை ஆட்டினார். நான் உடனே, துவைக்காமல் இருந்த ஒரு சர்ட்டை அணிந்துகொண்டு, பின் இருக்கையில் இல்லாமல் முன் இருக்கைக்கு வந்து அமர்ந்துகொண்டேன். எதிர்பார்த்துபோல், வழியில் நக்ஸல்கள் வரிவசூலித்துக் கொண்டிருந்தார்கள். லாரி, கார்களிடம் 500 ரூ வாங்குவதாக அங்கிருந்த ஒருவர் கூறினார். என் நண்பர் என்னைப் பார்த்து, என்னிடம் அவர்கள் ஏதாவது கேட்டால் லோக்கல் பாஷையில் பதில் கூறுமாறும், ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட பேசவேண்டாம் எனவும் அறிவுருத்தினார். நல்லவேளை, அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவேயில்லை. ஆனால், ஒருவன் என்னை உற்றுப் பார்த்தான், அவ்வளவுதான். இப்பகுதி மக்களிடம் நலத் திட்டங்களைப் பற்றி கூறியோ அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பேசியோ ஓட்டு வாங்க முடியாது. லோக்கல் பெரிய ஆட்களின் சப்போர்ட் மற்றும் ஜாதி இவைகளைத் தவிர அங்கு ஒன்றும் பெரிதாக செல்லுபடியாகாது...
Rate this:
Share this comment
Cancel
c.k.sundar rao - MYSORE,இந்தியா
22-ஏப்-201908:13:31 IST Report Abuse
c.k.sundar rao For a simple reason, if they are not able to get along in the alliance, how can they perform to work cohesily In formation of govt and in administration
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X