என்கிட்ட மோதாதே: பெண் சாமியார் மிரட்டல்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (28)
Advertisement

மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதி பா.ஜ., வேட்பாளர், பிரக்யா சிங்கின் சர்ச்சை பேச்சால், அவரது ஜாமீனை ரத்து செய்ய, எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதனால், சாத்வி பிரக்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மத்திய பிரதேச தலைநகர் போபால் லோக்சபா தொகுதியில் இதுவரை, 16 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில், எட்டு முறை பா.ஜ.,வும், ஒரு முறை, பா.ஜ.,வின் தாய் அமைப்பான பாரதிய ஜன சங்கமும் வெற்றி பெற்றுள்ளன. பாரதிய லோக் தளம் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளனர். இந்திய மறைந்த முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, காங்., சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில், 30 ஆண்டுகளாக, பா.ஜ., தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. பா.ஜ.,வின் சர்ச்சைக்குரிய பெண் தலைவரான உமாபாரதி, 1999ல் இங்கு வெற்றி பெற்றார்.

ம.பி.,யின் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் சார்பில், இந்த தொகுதியில் போட்டியிட்டு வெல்ல தயாராக இருப்பது யார் என, முதல்வர் கமல்நாத் சவால் விடுத்தார். அதை ஏற்று, முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார். அவரது பிரசாரமும், தேர்தல் யுக்திகளும், பா.ஜ.,வுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளன. இந்த தொகுதியில் திக் விஜய் சிங்கை சமாளிக்கும் வகையில், உமா பாரதியை நிறுத்த, பா.ஜ., முடிவு எடுத்தது. ஆனால், போட்டியில் இருந்து உமா பாரதி நழுவி விட்டார். அவர், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை நோக்கி கைகாட்டினார். அவரும் போட்டியில் இல்லாமல், 'எஸ்கேப்' ஆகி விட்டார்.


இறுதியாக பெண் சன்னியாசியும், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியமாக குற்றஞ்சாட்டப்பட்டவருமான, பிரக்யா சிங் வேட்பாளராகியுள்ளார். இவர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக குதித்துள்ளார்.மஹாராஷ்டிராவை சேர்ந்த, பயங்கரவாத எதிர்ப்பு படையின் போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே, 11 ஆண்டுகளுக்கு முன், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் குறித்து, பிரக்யாசிங் பிரசாரம் செய்துள்ளார். 'என்னை மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்க விட்டதால், அவருக்கு சாபம் விட்டேன். நான் சாபம் விட்ட ஒரே மாதத்தில், அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். என்னிடம் மோதாதீர்கள், என் சாபம் பொல்லாதது' என, காங்கிரசை பார்த்து அவர் கூறியுள்ளார்.

இது போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாலேகான் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிரக்யா சிங், உடல்நலனை காரணம் காட்டி, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது தேர்தலில் நிற்கும் அவருக்கு ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என, காங்கிரஸ் தரப்பில் சட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறையில் படுத்து துாங்குவதற்கே உடல்நலன் சரியில்லை என்றவருக்கு, தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் எப்படி உடல் நலன் சரியாக இருக்கும் என, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அதனால் அவரது இந்த விவகாரம், பா.ஜ.,வுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

- நீரஜ் மிஸ்ரா -
சிறப்பு செய்தியாளர்

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
24-ஏப்-201917:25:50 IST Report Abuse
Sathya Dhara திக் விஜய் சிங்க்.....மிகவும் தீய குணமுள்ள ஒரு ஹிந்து துரோகி. இவனை கான் கிராஸ் ஒரு பெரிய ஆளாக ஆக்கி உள்ளது. ஹிந்துக்களை சீண்டிய துரோகியை.......இத்தாலி அடிமைகளை ...இந்தியாவை வளர விட்ட துரோகி. இவனெல்லாம் அரசியல் பக்கமே வரக்கூஆடாது. பொது மக்கள் சிந்திக்க துவங்கி விட்டார்கள். இந்த நடமாடும் மிருக குணம் உள்ள கேவலமான கான் கிராஸ் கூட்டத்தை சேர்ந்த விஷ வித்துக்களை ....தேர்தலில் கடுமையான பாடம் புகட்டி மீண்டும் அரசியல் பக்கம் தலை வைத்து படுக்காதபடி செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
23-ஏப்-201910:05:04 IST Report Abuse
J.Isaac ஆணவமாக திமிராக பேசினால் கடவுள் உதவிசெய்ய அவன் பொம்மை அல்ல.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-ஏப்-201919:15:16 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தெய்வபலம் பலமானது. ஊழல் பலம் மோசமானது. ஆன்மீக பலம் அதிபலம் வாய்ந்தது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது காண்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X