சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பெண் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஜெய்ஹிந்த் தேவி. தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று, அங்கு பணிகள் முடிந்த நிலையில் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் அவரது கணவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டது. மன உளைச்சலால் ஜெய்ஹிந்த் தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட காவல் ஆய்வாளரான ஜெயக்குமார் விசாரித்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Rengaraj - Madurai,இந்தியா
22-ஏப்-201910:42:47 IST Report Abuse
P.Rengaraj முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் , தைரியத்தின் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்கள் கோழைத்தனமாக முடிவு எடுக்கக்கூடாது. பாரதி கண்ட புதுமை பெண்களாக சமூகத்தை மற்றும் பணியில் வீரம் நிறைந்த மகளிர் இந்த நாட்டுக்கு ரொம்பவே முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-ஏப்-201910:21:07 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் பணிக்குச் சென்றவருக்கு அங்கு என்ன பிரசினை ஏற்பட்டதோ? மன உளைச்சலிலும் கூட இம்முடிவை எடுத்திருக்கலாம் எத்தனையோ உண்மைக் காரணங்களை ‘குடும்பத்தகராறு , காதல் தோல்வி’ என்று ஸ்டாண்டர்ட் காரணங்களைக் கூறி கேஸை முடிப்பதும் சாத்தியம்தான்
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-ஏப்-201908:33:26 IST Report Abuse
அசோக்ராஜ் பெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டு 30- ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் சில பாட்ச் பெண் காவலர்கள் ஓய்வும் பெற்று விட்டார்கள். தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை விட வேண்டிய தருணம் இது. இதுவரை எத்தனை பெண்கள் காவல் துறையில் சேர்ந்தனர்? பாதியில் வேலையை விட்டவர் எத்தனை? தற்கொலை செய்தவர்கள் எத்தனை? கொலை செய்யப்பட்டவர்கள் எத்தனை? விவாகரத்து செய்தவர்கள் எத்தனை? திருமணம் செய்யாதவர்கள் எத்தனை? பைத்தியம் ஆனவர்கள் எத்தனை? விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆய்வு செய்தால் தமிழ்க் கலாச்சாரத்தோடு சற்றும் பொருந்தாத இந்தப் பணியை நிறுத்த்தும் முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும். பெண் போலீஸ் கொள்கை தோற்றுவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X