வயநாடு: வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாக, காங்., தலைவர் ராகுலின் சகோதரி, பிரியங்கா கூறினார்.

நாளை ( ஏப்.23) தேர்தலை சந்திக்கும், கேரளாவின் வயநாடு தொகுதியில், காங்., தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். இதைத் தவிர, உ.பி.,யின் அமேதி தொகுதியிலும், அவர் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின், உ.பி., கிழக்கு பகுதியின், பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள, ராகுலின் சகோதரி, பிரியங்கா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வயநாட்டில் நேற்று பிரசாரம் செய்த, பிரியங்கா கூறியதாவது: வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, நான் போட்டியிட வேண்டும் என, ராகுல் விரும்பினால், அவர் உத்தர விட்டால், போட்டியிடுவதற்கு தயாராக உள்ளேன். யார் வேட்பாளர் என்பதை, கட்சித் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.