இலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப் | Dinamalar

இலங்கை பலி தவறாக பதிவிட்ட டிரம்ப்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (23)

வாஷிங்டன் : இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை மில்லியனில் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்.






இலங்கையில், 'ஈஸ்டர்' தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 225 பேர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பல நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


138 மில்லியனா?






இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்கு உரியது. இதில் 138 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டார்.

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை மில்லியனில் பதிவிட்ட டிரம்பை, சமூக வலைதள வாசிகள் கேலி செய்து வருகின்றனர். இதனையடுத்து அவரது டுவிட்டர் பதிவு 138 பேர் என திருத்தம் செய்யப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X