பொது செய்தி

தமிழ்நாடு

'நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க இருண்ட சூழல் வருகிறது'

Added : ஏப் 22, 2019
Advertisement

திருவண்ணாமலை: ''நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க, இருண்ட சூழல் வருகிறது'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.
திருவண்ணாமலையில், காங்., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில தலைவர் அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், நிருபர்களிடம் அழகிரி கூறியதாவது: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கொள்கை ரீதியாக மக்கள் ஒன்று திரண்டதை காண முடிந்தது. நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க, இருண்ட சூழல் வருகிறது. அரசியல் சட்டம், அரசியல் அமைப்பை தகர்க்க குறியாக உள்ளனர். அரசுக்கு எதிரான தீர்ப்பு கூறியதால், உச்சநீதிமன்ற நீதிபதி மீது, பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது அவமானம். மத்திய அரசின் அழுத்தத்தால், ஏற்கனவே இரண்டு ரிசர்வ் வங்கி கவர்னர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மதுரையில், ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை சீல் வைக்கவில்லை. மூன்று மணி நேரம், அந்த அறையில் ஒரு பெண் தாசில்தார் இருந்துள்ளார். அவர், என்ன செய்தார் என, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை காண்பிக்குமாறு கூறினால், கேமரா வேலை செய்யவில்லை என்கின்றனர். தேர்தல் தங்களுக்கு சாதகமாக இல்லை என, தெரிந்து கொண்டு ஏதோ செய்ய நினைத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையாகும். இந்திய ஜனநாயகம் மிக மிக வலிமையானது. இதை அழிக்க, அனுமதிக்க மாட்டோம். வன்முறை என்பது, காட்டுமிராண்டித்தனமானது. மேகதாது பிரச்னையில் நீதிமன்ற தீர்ப்பு படி, காங்., செயல்படும். மாநிலங்களுக்கு, காங்., கூடுதல் அதிகாரம் வழங்கும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி, மாநிலப்பட்டியலில் சேர்க்கப்படும். இதனால், நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பது, அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யும். ?ஹட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தலாமா, செயல்படுத்தக்கூடாதா என்பது குறித்து, விஞ்ஞானிகள்தான் தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X