அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை : 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், வரும் மே 19 அன்று அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலுார் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஏற்கனவே, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.
ஏப்ரல் 22 முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். அதில், '' சூலுார் தொகுதியில் சுகுமார், அரவக்குறிச்சி தொகுதியில் ஷாகுல் ஹமீது, திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜ் ஆகியோர் போட்டியிடுவர்,'' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
22-ஏப்-201917:46:23 IST Report Abuse
Tamilselvan டோக்கன் பார்ட்டி,டுபாக்கூர் பார்ட்டி இந்த தேர்தலுடன் ஒழிந்து போவார் .
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
22-ஏப்-201917:20:10 IST Report Abuse
oce மார்ச் 2021 வரை தங்க தமிழர்கள் திருவாளர்கள் எடப்பாடி பழனி சாமி ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இதே நிலையில் நீடிப்பார்கள். மார்ச்ச 21 ஐ அடுத்து இரண்டொரு மாதங்களில் வரும் சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி தரும் என்று குறளி சொல்கிறது.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
22-ஏப்-201917:15:39 IST Report Abuse
oce அந்த பதினெட்டுபேரின் இன்றைய நிலை டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கை பாரு தங்கமே தில்லாலே. நல்லவர்கள் முட்டி போட்டாவது தமிழக மக்களுக்கு நல்லாட்சி தந்துள்ளார்கள். முன்னாள் தமிழக முதலவருடன் கூட இருந்தே குழிபறித்தவர்களை இறைவன் பொறுக்காமல் சிறையில் தள்ளி விட்டான். அதை ஏன் சொல்லாமல் மறைக்கிறீர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X