இலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (96)
Advertisement

கொழும்பு : இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில், வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






ஈஸ்டர் திருநாள் அன்று பிரார்த்தனையின் போது 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில், 290 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 400 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 இந்தியர்கள் உள்ளிட்ட 35 நாட்டினர் உயிரிழந்துள்ளனர்.





சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை போலீசார் கைதுசெய்துள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பெரும்பாலும் கொழும்பு புறநகர் பகுதியான பானுதுரா என்னுமிடத்தில் தங்கியிருந்துள்ளனர் என்று போலீஸ் செய்தி தொடர்பாளர் ரூவன் குணசேகரா கூறியுள்ளார்.
இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்றதாக வேன் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல்களாகவே இருந்துள்ளன.
மேலும், கொழும்பு பண்டாரநாயகா விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சாலையோரம் பைப் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அது வெடிக்கும் முன்னர் செயலிழக்கச் செய்யப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மோசமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள வேன் டிரைவர் உள்ளிட்ட 24 பேரும், என்ஜிடி எனப்படும், நேஷனல் தவ்ஹீத் ஜமா அத் என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என்று இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURAKALA SELVARAJ - SALEM ,இந்தியா
23-ஏப்-201912:05:13 IST Report Abuse
MURAKALA SELVARAJ கொடுமை. கொடூரம். மனித மிருகங்கள். என்ன சாதிக்க போறாங்க.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
22-ஏப்-201917:00:48 IST Report Abuse
jagan இந்த குண்டு வெடிப்பு செய்தி பார்த்தவுடன் முதலில் நான் எழுதியது "மூர்கத்தவர்களை விஜாரிக்க வேண்டும் ..... 21-ஏப்-2019 "...யோசிக்கவே வேண்டாம், இதெல்லாம் எல்லாம் அதுங்க தான் செய்யும்
Rate this:
Share this comment
Cancel
mayavan - Chennai,இந்தியா
22-ஏப்-201916:24:34 IST Report Abuse
mayavan பிரபாகரன் ஆவி பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது இலங்கை அரசால் கொடூரமாக கொலை seyyapatta தமிழர்களின் ஆவி மீண்டும் உயிர் பெற்றுள்ளது என்று நம்பலாம்
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
22-ஏப்-201916:57:01 IST Report Abuse
jaganசெத்ததில் பாதி தமிழ் , மூர்கர்களின் அராஜகம் வேறு எதுவும் இல்ல....
Rate this:
Share this comment
Sittu Kuruvi - covai,இந்தியா
22-ஏப்-201916:58:12 IST Report Abuse
Sittu Kuruviபிரபாகரனுக்கே நெத்தில போட்டு வச்சு அனுப்பிட்டாங்க.. இதுல ஆவி வேற.....
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
22-ஏப்-201917:34:20 IST Report Abuse
dandyநாங்கள் அடித்தால் ..கொன்றால் கூட இளிப்போம்....திருப்பி அடிக்க மாட்டொம்...
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-ஏப்-201906:37:41 IST Report Abuse
Sanny அப்படி தமிழர்களின் ஆவி பழிவாங்கனும்னா முதலில் ராஜபக்சே குடும்பம், கோபாலபுரம் குடும்பம், அடுத்து சோனியா குடும்பம், ஆனால் தமிழன் இப்படி அநியாயமாக பழிவாங்க மாட்டான், சொல்லிவச்சு தனித்தனியா நெற்றியில் அடிப்பான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X