டிக் டாக் செயலி தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'டிக் டாக்' செயலி தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்றம்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (4)

புதுடில்லி: 'டிக் டாக்' செயலிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 24 ல் வழக்கை விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நாட்களுக்கு முன்னர் 'டாக் டாக்' செயலிக்கு தடை விதித்திருந்தது. இதனை பதிவிறக்கம் செய்வதை தடை செய்யுமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தடையை நீக்குமாறு சீன நிறுவனமான 'டிக் டாக்' உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில், 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்க முன்னதாக உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கை ஏப்ரல் 22 க்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் டிக்டாக் செயலி ஆபாசம், கலாசார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி தடை செய்ய வலியுறுத்தினார்.
இதனை ஏற்று உயர் நீதிமன்றம் பிரபலமான சீன வீடியோ ஆப்பான டிக்டாக் “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி அதை தடை செய்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. டிக் டாக் பதிவிறக்கத்தை மத்தியில் தடை செய்யவும் கேட்டிருந்தது. டிக்டாக் ஆப் இந்தியாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது.
“நாங்கள் தகவல் தொழில் நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம. சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக” டிக்டாக் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று (ஏப்.22) டிக் டாக் மீதான தடையை நீக்க மறுத்த உச்சநீதிமன்றம், டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை வரும் ஏப். 24 ல் விசாரித்து தீர்ப்பளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.


ஒருவேளை புதனன்று தீர்ப்பு வழங்கா விட்டால், டிக் டாக் செயலி மீதான தடை தானாகவே விலகிவிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X