அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் தேர்தல் அதிகாரி விசாரணை

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (6)
Advertisement

மதுரை : மருத்துவக் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ள ஓட்டு மெஷின்களின் அறைக்குள் அத்துமீறி பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில், தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி விசாரணையை தொடங்கியுள்ளார்.
மதுரை மருத்துவக்கல்லுாரியில், லோக்சபா தொகுதிக்கான ஓட்டு மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், தாசில்தார் சம்பூர்ணம் என்பவர் உள்ளிட்ட 4 பேர் அனுமதியின்றி நுழைந்ததாக பிரச்னை எழுந்தது. இதில் முதலில் தாசில்தார் சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மீதி 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முன்னதாக, மதுரை மாவட்ட கலெக்டரிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ விளக்கம் கேட்டிருந்தார். பின்னர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜியை நேரில் விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இதனை அடுத்து மதுரை வந்த கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி, தாசில்தார் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்தது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளார். அவர் மதுரையில் முகாமிட்டு அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விசாரிக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஏப்-201920:37:21 IST Report Abuse
ஆப்பு அவிங்க வீட்டை சோதனை போடுங்க..கள்ள ஈ வீ எம் கள் கிடைக்கலாம். விஞ்ஞான முறையில் ஊழல் செஞ்ச மாநிலமாச்சே...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஏப்-201916:26:16 IST Report Abuse
Endrum Indian ஏன் போனார்கள்?? யார் சொல்லி போனார்கள்?? என்ன செய்யப் போனார்கள்? அதுவும் தாசில்தார் என்னும் போது நிச்சயம் ஒரு காரணம், அறிந்து ஆய்ந்து இருக்கும். இந்த நான்கு பேர் மட்டும் இல்லாமல் இதன் காரணி யார் என்று அவனுக்கு மரண தண்டனை கொடுத்தால் அடுத்த முறை இப்படி நிகழவே நிகழாது .
Rate this:
Share this comment
Cancel
francis - chennai,இந்தியா
22-ஏப்-201915:55:54 IST Report Abuse
francis அவர்களை பதவி நீக்கம் செய்து விட்டால் சரியாகி விடுமா?.. அதெல்லாம் தேவை இல்லை.. அவர்களை விசாரிக்க வேண்டும்.. காலை 3 மணிக்கு அவர்கள் உள்ளே செல்ல காரணம் என்ன.. மூன்று மணி நேரம் அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள் என்ற விவரம் வேண்டும்.. அவர்கள் உள்ளே செல்ல காரணமாக இருந்தவர் யார்.. உண்மையை வர வைக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X