பொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (148)
Advertisement

புதுடில்லி; ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததற்கு சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரியுள்ளார்.






ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாம் என கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.
'ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் நடைமுறையில், எந்த மோசடியும் நடந்ததற்கான சந்தேகம் எழவில்லை' என, முதலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 'திருடப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் எந்த முடிவையும் நீதிமன்றம் எடுக்கக் கூடாது' என மத்திய அரசு வாதிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இதனை நிராகரித்து விட்டது.





மீடியாக்களில் வெளியான ஆவணங்கள் ஆய்வு செய்ய எடுத்து கொள்ளப்படும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து ராகுல்; பிரதமர் மோடியை கோர்ட்டே காவலாளியான மோடியை திருடன் என்று கூறி விட்டது என்று தெரிவித்தார். இதற்கு பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ராகுல் பொய் சொல்கிறார். கோர்ட் உத்தரவில் நீதீபதிகள் பிரதமர் மோடி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்றும், ராகுலின் கருத்து கோர்ட் அவமதிப்பு என்றும் மத்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கில் ராகுல் சார்பில் அவரது வழக்கறிஞர் அபிடவிட் ஒன்றை தாக்கல் செய்தார். இதில் ராகுல் தரப்பில் வருத்தம் தெரிவிப்பதாகவும், பிரசாரத்தில் வார்த்தைகள் தவறாக வந்து விட்டது, இது துரதிருஷ்டமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (148)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Chennai,இந்தியா
28-ஏப்-201910:19:30 IST Report Abuse
Baskar இந்தியாவில் வெறும் சட்டம் வைத்து மட்டும் வாதாட கூடாது. நீதி மன்றங்கள் என்னென்ன தீர்ப்புக்கள் வழங்கி இருக்கிறது என்பதை வைத்தும் வக்கீல்கள் வாதாட வேண்டும். இல்லை என்றால் பொது மக்கள் குறைவாக செய்கின்ற குற்றத்திற்கு அதிக பக்ஷ தண்டனை பெறுகின்றனர். ஆனால் பணக்காரர்களுக்கு மென்மையான செல்லமான எச்சரிக்கை மட்டும் கிடைக்கின்றன .
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
28-ஏப்-201907:47:19 IST Report Abuse
K.   Shanmugasundararaj ராகுல் காந்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அது அவரது உயர்ந்த குணத்தை காண்பிக்கின்றது/ தெரிவிக்கின்றது. ஆனால் ரபேல் வழக்கில் தூயவான்/ யோக்கியர் உச்சநீதிமன்றத்தில் கூறிஉள்ளவை அனைத்தும் உண்மைதானா?.இங்கே ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள வாசகர் பெருமக்களே சொல்லுங்கள்."சங்கு சுட்டாலும் வெண்மை தரும்". " புலி பசித்தாலும் புல்லை தின்னாது".
Rate this:
Share this comment
Cancel
fardhikan - lakshmaangudi,இந்தியா
24-ஏப்-201912:52:37 IST Report Abuse
fardhikan eppa poy solratha niruththapokutho theriyala
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X