பிரணாப் மகன் பிரம்மபிரயத்தனம்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் காங்., சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்துக்கு வெற்றி பெறுவது பிரம்மபிரயத்தனமாக இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார் அபிஜித். இது பாரம்பரியமாகவே காங்., தொகுதி. ஏற்கனவே பிரணாப் மற்றும் அபிஜித் வெற்றி பெற்ற தொகுதி. இப்போது காங்.,கிற்கும் திரிணாமுல் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.



latest tamil news



2014 தேர்தலில் இத்தொகுதியில் 4 முனை போட்டி நிலவியதால் அபிஜித் வெறும் 8 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. பா.ஜ.,வுக்கு இங்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. அக்கட்சி சார்பில் நின்ற சாம்ராட் கோஷ் மொத்தம் பதிவான 11 லட்சம் ஓட்டுகளில் ஒரு லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றார்.
இப்போது அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கை 16 லட்சம் ஆகி உள்ளது. இதில் 70 சதவீதம் பேர் முஸ்லீம்கள். ஏப்.23ம் தேதி இங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.


latest tamil news



ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்திற்கு பிரணாப் சென்று வந்த பிறகு பா.ஜ.,வுக்கும் பிரணாப் குடும்பத்திற்கு நட்பு அதிகரித்துள்ளது. அபிஜித்துக்கு எதிராக ஒரு முஸ்லீம் பெண்ணான மபுஜா காதுன் என்பவரை பா.ஜ., நிறுத்தி உள்ளது. இவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர்.
மற்ற கட்சிகளைப் போலவே பா.ஜ.,வும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தி உள்ளதால் இக்கட்சியும் முஸ்லீம் ஓட்டுகளை பெறும் என்கிறார்கள்.நாடு முழுவதும் பா.ஜ., நிறுத்தி உள்ள 460 வேட்பாளர்களில் ஹிமாயூன் கபீருக்கு அடுத்த முஸ்லீம் வேட்பாளர் மபுஜா தான்.
இந்த போட்டியைப் பார்த்து கவலைப்பட்ட பிரணாப், திரிணாமுல் கட்சியுடன் பேசிப்பார்த்தார். ஆனால் அபிஜித்துக்கு எவ்வகையிலும் உதவ முடியாது என்று திரிணாமுல் கூறிவிட்டது.காங்.,கிற்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே உடன்பாடும் ஏற்படவில்லை.
தேசிய குடியுரிமை பதிவேடு சட்டம், வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் தலைக்கு மேல் கத்தியாக தொங்குகிறது. இதனால், பெரும்பாலான முஸ்லீம்கள் திரிணாமுல்லை ஆதரிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அபிஜித்தின் வெற்றி கேள்விக்குறி தான்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஏப்-201910:45:23 IST Report Abuse
Bhaskaran இந்திராஇறந்தவுடன் தான் தான் அடுத்தபிரதமர் என்று அறிவித்து காங்கிரசால் ஓரம்கட்டப்பட்டவர்தானே இவர்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201908:05:10 IST Report Abuse
Srinivasan Kannaiya வாரிசு வரவேண்டுமே என்ற கவலை அவருக்கு
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-ஏப்-201919:59:25 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN முன்னாள் ஜனாதிபதிக்கு கொள்ள ஆசை அப்போதே ஜனாதிபதியாக பெருத்த அவா ஆசை கொண்டு காய்நகர்த்தி ஆண்டார் .அரசியல் ஆசை தீரல. அதாவது ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் ஓட்டு உரிமை உண்டு. ஆனால் அரசியல் ஆள கோட்டீஸ்வரன்களுக்குத்தான் முழுஉரிமை என்பதை கண்கூடாக காண முடிகிறது. அதுதான் மக்கள் ஆட்சி என்பது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X