இலங்கையில் டெட்னேட்டர் பறிமுதல்: இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (18)
Advertisement

கொழும்பு : இலங்கையில் இன்று (ஏப்.22) நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். ஈஸ்டர் திருநாளான நேற்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. 290 பேர் பலியாகினர். 400 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பஸ் நிலையத்தில் இன்று 87 டெட்டேனேட்டர்கள் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கைப்பற்றி போலீசார் செயல் இழக்க செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு


இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னே கூறுகையில்: உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரித்தும் போதிய பாதுகாப்பு செய்யாதது அரசின் குறைபாடு. இந்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறது. இந்த சதி இல்லாமல் இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பு நடத்த முடியாது என்றார்.

இது போல் அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில்: இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலையில் முப்படை வீரர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. நாளை (22 ம் தேதி ) தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களே என்றும் அவர் உள்ளூர் இஸ்லாமிய அமைப்பை சாடியிருக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
22-ஏப்-201919:09:50 IST Report Abuse
Muthuraj Richard முதலில் இறந்தவர்களுக்கு எமது அஞ்சலியை தெரிவிக்கிறோம், அவர்களது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம், நியாயமாக அண்டை நாட்டு பிரச்சனையில் நாம் அதிகம் மூக்கை நுழைப்பது போல தான் ஆரம்பம் முதல் நமது அரசியல்வாதிகள் பேசியும் நடந்தும் அறிக்கைகள் கொடுத்ததும் வருகிறார்கள், ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு உள்நாட்டு பிரச்சனைகளில் தத்தளித்து வந்த இலங்கை நிர்வாகங்கள் வெறுமனே விடுதலை புலிகளையும் தமிழ் சமூகத்தையும் குற்றம் சொல்லிவந்தது இன்று இந்த துரதிர்ஷ்டமான நிகழ்வால் வெளிப்பட்டிருக்கிறது, தீவிரவாதத்திற்கு நாம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம், அச்சுறுத்தல் எல்லார்க்கும் உண்டு, ஆக நாம் விடுதலைப்புலிகளை நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போது தாக்குதல் நடத்தியவர்கள் கொடுத்துவந்த அச்சுறுத்தல் மிக கொடூரமானது, இந்த அச்சுறுத்தக்கல்கள் விடுதலை புலிகள் தோன்றும் முன்பாகவே இருந்துவருகிறது, இலங்கை அரசுகள், குறிப்பாக ராஜபக்சே அரசு சீனாவிற்கு கொடுத்துள்ள சலுகைகள், அரசியல் ரீதியான தொடர்புகள் எல்லாமே இதைவிட ஆபத்தானது, அண்டைநாடுகளையும் சேர்த்து பாதிக்கிற வகையில் தான் உள்ளன, உதவிக்கரம் நீட்டும் இந்தியாவை விட அதிக இடம் கொடுத்திருப்பது சீனாவிற்கு தான், அதன் விளைவையும் விரைவில் அனுபவிக்க போகிறார்களோ என்ற ஐயம் உலகளவில் எல்லார்க்கும் உண்டு, என்ன நடந்தாலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பது மிக பரிதாபத்துக்குரியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது, வேறு நாட்டில் நடந்த பிரச்சனைக்காக நாம் வேண்டாத கருத்துகளை நம் நாட்டு அரசியல் தலைவர்கள் மீது பரிமாறுவது நாகரீகமற்றது என்பது நமது கருத்து, உயிரிழந்த அனைவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம், அவர்கள் குடும்பங்களுக்கு கடவுள் ஆறுதல் அளிப்பாராக.
Rate this:
Share this comment
Cancel
raaskolu - Tamilnadu,இந்தியா
22-ஏப்-201917:07:04 IST Report Abuse
raaskolu தேர்தல் நேரமென்பதால் இங்கேயும் அவர்கள் கைவரிசை காட்டலாம். பொதுமக்களே கவனம் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
22-ஏப்-201917:02:42 IST Report Abuse
வல்வில் ஓரி இன்னும் வெடிச்சிகிட்டே இருக்குதாம்ல..?
Rate this:
Share this comment
Halfmoon - Karaikudi,இந்தியா
22-ஏப்-201919:29:24 IST Report Abuse
Halfmoonஉன்னமாதிரி ஆட்கள் இருக்கும்வரை உலகெங்கும் வெடிகுண்டு சத்தம் கேட்க்கொண்டேதான் இருக்கும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X