தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (19)
Advertisement

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
-காழியூர் நாராயணன்.


சென்னையில் வசிக்கும் பிரபல ஜோதிடரான காழியூர் நாராயணன் திநகர் ஹூயூமர் கிளப் நிகழ்வில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கிளப் உறுப்பினர்கள் வரிசையாக ஜோக் சொல்லிக் கொண்டு வந்தனர் அம்பத்துார் நாராயணன் என்பவர் பேசுகையில் ஜோசியமே படிக்கக்கூடாது, பார்க்கக்கூடாது என்று நினைப்பேன் மறந்து போய் காழியூர் நாராயணனின் நாள் பலனை ஒரு நாள் படித்துவிட்டேன் அதில் பணவரவு என்று போட்டிருந்தது.
நமக்கு இப்போது எண்பத்தைந்து வயது, சிவனே என்று வீட்டில் உட்கார்ந்து இருக்கிறேன், நமக்கு எப்படி பணவரவு இருக்கும் அது எப்படி கிடைக்கும்? என்று பலவாறு யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதே நாளிதழில் ஒரு ஒரத்தில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.அதில் எண்பது வயதிற்கு மேலானவர்களுக்கு 3 ஆயரம் ரூபாய் வழங்கப்படும் என்று போட்டிருந்தது.ஆகா ஜோசியம் பலிக்கப்போகிறது என்று முடிவு செய்து விளம்பரத்தில் சொல்லப்பட்ட இடத்திற்கு ஆட்டோ எடுத்துக்கொண்டு போனேன்.போகவர முன்னுாறு ரூபாய் ஆட்டோ வாடகை பேசிக்கொண்டேன்.மூவாயிரம் ரூபாயில் முன்னுாறு ரூபாய்தானே போகட்டும் என்று எண்ணிக்கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றேன்.
அங்கே இருந்தவர் ஆதார் கார்டு பான் கார்டு ரேஷன் கார்டு என்று எல்லா கார்டுகளையும் சரிபார்த்துவிட்டு நீங்கள் பணம் பெற தகுதியானவர்தான் ஆனால் நாங்கள் இந்தப் பணத்தை உங்கள் பெற்றோரிடம்தான் ஒப்படைப்போம் என்றனர்.
அட ஈசுவரா அவுங்க போய்ச்சேர்ந்து நாற்பது வருஷமாச்சு எப்படியப்பா அழைச்சுட்டு வருவது என்று கேட்டேன் அதெல்லாம் முடியாது சார் ரூல்ஸ்னா ரூல்ஸ்தான் என்று சொல்லிவிட்டனர்.
அட கிராதகர்களா என்று சபித்துவிட்டு வெளியே வந்தேன் என் தொங்கிப்போன முகத்தைப் பார்த்துவிட்டு நடந்தை கேட்டு அறிந்த ஆட்டோக்காரர் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு இருநுாறு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச்சென்றார்,ஆக அந்த வகையில் எனக்கு நுாறு ரூபாய் வரவு என்று எடுத்துக்கொண்டேன் என்று நகைச்சுவையாக பேசினார்.
அந்த நாள் பலன் எழுதிய காழியூர் நாராயணன் இங்கே வந்திருக்கிறார் அவர் தனது ஜோசிய ஞானம் காரணமாக இந்த லோக்சபா தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்வார் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.பார்வையாளர்கள் சிலரும் அதே கேள்வியை கேட்டனர்.
இதை அடுத்து மைக்கை பிடித்த காழியூர் நாராயணன், ஜோசியம் என்பது அவரவர் மனதிற்கு ஆறுதல் தேடும் ஒன்றுதான் ஆனால் ஆறுதல் தேடுவது ஒன்றையே வேலையாக வைத்துக்கொள்ள வேண்டியது இல்லை. ஒருவருக்கு சரியாக இருப்பது இன்னோருவருக்கு சரியாக இருக்காது ஆகவே நடந்தால் சந்தோஷப்டுங்கள் நடக்காவிட்டால் வருத்தப்படாதீர்கள் என்றவர் எல்லோரும் இந்த தேர்தல் முடிவு பற்றிக் கேட்கிறார்கள் என் மண்டை உடையாமல் நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று சிரித்தபடி கேட்டுவிட்டு அவரும் அமர்ந்தார்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-ஏப்-201912:08:46 IST Report Abuse
Lion Drsekar மிக அருமையான ஒரு செய்தி , ஆனால் பலர் தவறாக ஜோசியம், மற்றும் கூறுபவர்களை விமர்சித்தது அவரவர்கள் மனதுக்கு சரியாகப்படலாம். ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டியது . உண்மையைக் கூறினால் ஜனநாயகத்தில் உயிருக்கு ஆபத்து, இதுதான் செய்தி. அதே போன்று நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் இன்னலுக்கு உள்ளாவார்கள், தற்போது மழை இல்லை. இன்று மேகமூட்டமாக இருக்கிறது, சில்வர் நைட்ரைட் குச்சியைக்கொண்டு செயற்கை மழை பொழிய வைத்திருக்கலாமே ?? ஜனநாயக நாட்டில் மக்களுக்கு எந்த துறையாக இருந்தாலும் தினம் தினம் ஏதாவது ஒரு தொல்லை கொடுத்துக்கொன்டே இருக்கவேண்டும், இல்லையென்றால் மக்கள் ஒற்றுமையாகி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள், ஆகவே நல்ல கருத்துக்களை ஜனநாயகம் விரும்பாது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Tamil Mozhi - salem,இந்தியா
27-ஏப்-201908:54:52 IST Report Abuse
Tamil Mozhi உண்மை
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-ஏப்-201912:46:58 IST Report Abuse
Nallavan Nallavan சோதிடம் மூட நம்பிக்கை என்று சொல்லுவோர் "சோதிடம் என்பது ஹிந்து மதத்துக்கே சொந்தமானது" என்கிற எண்ணத்தில் அறியாமையில் உழல்கிறார்கள் .... பல மதங்களில் சோதிட நம்பிக்கை உண்டு ...... சோதிடம் பார்க்கும் முறை வேறாக இருக்கலாம் .....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-ஏப்-201902:54:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இந்து மத ஜோதிடம் சாஸ்திரத்தில் உள்ளது. நிஜம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X