பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக மழை

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், தற்போது நீலகிரி , குமரி , திருப்பூர் மற்றும் மதுரை , தேனி போன்ற பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து வருகிறது.



latest tamil news




தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.


latest tamil news




சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இன்று முதல் 24ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னுார், வெலிங்டன் மற்றும் பெர்போர்ட் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல, திருவள்ளூர், காஞ்சிபுரம், குமரி மாவட்டத்தின் தக்கலை மற்றும் அழகிய மண்டபம் பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலுார் மற்றும் அழகர்கோவில் பகுதிகளில் பலத்த மின்னலுடன் பரவலாக மழை பெய்கிறது. மேலுாரில் மின்னல் தாக்கி தியாகராஜன் என்பவர் உயிரிழந்தார். தியாகராஜன் மேலுார் சென்னாநகரத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்துார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை ,பாவக்கல் , சாமல்பட்டி, சிங்காரபுரம், காரப்பட்டு போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம், ஜெயமங்கலம், லட்சுமிபுரம் வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.
வேலுார் மாவட்டம் அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய பாளையம், ஜனபா சத்திரம், செங்குன்றம் மற்றும் தச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது..

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் பலத்த மழை பெய்கிறது.
வேலுார்:வாணியம்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம்:ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி சுற்றுபகுதிகளில் மழை பெய்கிறது.
நெல்லை:அம்பாசமுத்திரம், கடையநல்லுார் சுற்று பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை:பல்லாவரம், மேடவாக்கம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், நன்மங்கலம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
22-ஏப்-201920:43:51 IST Report Abuse
Snake Babu இறைவணனின் அருட்கொடை மழைக்கு நன்றி, நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X