மோடிக்கு முக்கியமான 3வது கட்ட தேர்தல்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement

புதுடில்லி: நாளை (ஏப்.23) நடக்க உள்ள 3வது கட்ட தேர்தல், பிரதமர் மோடிக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.
லோக்சபாவுக்கு ஏற்கனவே 2 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. இந்த இரண்டிலுமே பா.ஜ.,வுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதுவரை தேர்தல் நடந்த உ.பி., மகாராஷ்டிரா தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படலாம்.latest tamil newsகர்நாடகாவில் அதிக பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. ஆனாலும் சென்ற தேர்தலைவிட இம்முறை நிலைமை மேம்படும் என்றும் கூற முடியவில்லை.ஆனால் ஏற்கனவே 2 கட்ட தேர்தல்களும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று மோடி நம்புகிறார்.
வங்கம் மற்றும் ஒடிஷா:மூன்றாவது கட்ட தேர்தல் நடக்கும் வங்கம் மற்றும் ஒடிஷாவில் அதிக வெற்றி பெறுவோம் என பா.ஜ., நம்புகிறது.
இந்த இரு மாநிலங்களிலும் 2வது பெரிய கட்சியாக பா.ஜ., மாறி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் எவ்வளவு இடங்களை இக்கட்சி பிடிக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. 2014 தேர்தலில் மோடி அலை அடித்தபோது கூட வங்கத்தில் 2 இடங்களில் தான் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சி 17 சதவீத ஓட்டுகளைப் பெற்று ஒரு மரியாதையை பெற்றது.
வங்கத்தில் குறிப்பிட்ட அளவு ஓட்டுகளை பெற்று, உ.பி.,யில் நஷ்டத்தை குறைத்தால் ஜாதி அரசியல் நடக்கும் வடமாநிலங்களில் பா.ஜ.,வுக்கு லாபம் கிடைக்கும்.


latest tamil newsஉ.பி.,யின் முக்கியத்துவம்:உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகள், பா.ஜ.,வுக்கு இங்கு கிடைக்கும் ஓட்டுகளால் இம்மாநிலம் முக்கியத்துவம் பெறுகிறது. அக்கட்சிக்கு இங்கு கிடைக்கும் வெற்றிதான் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா கிடைக்காதா என்பதை முடிவு செய்யும்.
அம்மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன், ராஷ்ட்ரிய லோக்தள் ஆகிய கட்சிகள் இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாடு தான் பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு உ.பி.,யில் முஸ்லீம்கள், ஜாட் மற்றும் ஜாதவ் இன மக்கள் மட்டும் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். இன்னொரு பெரும்பான்மை சமூகமான யாதவர்கள் மேற்கு உ.பி.,யில் சிறிது அளவும் மத்திய மற்றும் கிழக்கு உ.பி.,யில் அதிகமாகவும் வசிக்கின்றனர்.
கடுமையான பிரசாரத்தால் மோடிக்கு செல்வாக்கு இன்னும் உள்ளது தெரிகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியையும் அவரது பிரசாரம் குறைத்துள்ளதாக கருதப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
23-ஏப்-201911:32:58 IST Report Abuse
Rengaraj யார் வந்தாலும் ஆதார், மொபைல் போன் நம்பர் , பான் கார்டு, பேங்க் அக்கௌன்ட் நம்பர், ஓட்டுநர் உரிமம் , வாக்காளர் அடையாள அட்டை இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அது கட்டாயமாக்கப்பட வேண்டும். நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே அரசு சலுகை என்று நிர்பந்திக்கப்பட வேண்டும். அரசுக்கு வரவேண்டிய பணத்தை திருடினால் அல்லது ஏமாற்றினால் அது ஒரு ருபாய் என்றாலும் கிரிமினல் குற்றம் என்று அறிவிக்க வேண்டும். அவர்கள் அனுபவித்த சலுகைகள் பறிக்க பட வேண்டும் . மாநிலங்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சினைக்கும் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு உச்ச நீதிமன்றம் அமைக்கும் ட்ரீபியூனலில் மட்டுமே வழக்கு நடைபெற வேண்டும். கம்பெனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் , அரசு ஊழியர் வேலை சம்பந்தப்பட்ட விதிமீறல்களுக்கும் விதிக்கப்படும் அபாரதங்களும், தண்டனைகளும் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
23-ஏப்-201911:10:07 IST Report Abuse
Ramalingam Krishnaswamy உங்கள் செய்தித் தலைப்பே அவலமானதாக உள்ளது. நமது பிரதமர், "மோடிக்கு எவ்விதத்தில் இது முக்கியமான 3வது கட்ட தேர்தல்" என்பது சரியாகும் நமது நாட்டிற்கும் நமக்கும் வேண்டுமானால் ஒருவேளை இது முக்கியமானதாக நமது தலைவிதியைப் பொருத்து அமையலாம். நம் பிரதமர் என்ன தம் வாரிசுகளின் தலைமுறைக்குச் சொத்து சேர்க்கவா இந்த தேர்தலில் ஓடியோடி உழைக்கிறார். இதெல்லாம் சிதம்பரம் போன்ற பொருளாதார அதிமேதாவிகளுக்கும் நாட்டைக் குட்டிச் சுவராக்க வம்சாவழி ஆட்சியை விரும்பும் நம் ராகுல் மற்றும் பிரியங்கா போன்ற தேர்ந்த பழுத்த அனுபவமிக்க அரசியல் வாதிகளுக்கும் வேண்டுமானால் மிக முக்கியமான தேர்தலாகலாம்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201908:03:01 IST Report Abuse
Srinivasan Kannaiya யாராவது வந்து விலைவாசியை குறைக்கமாட்டானா
Rate this:
23-ஏப்-201911:01:09 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன். இங்கே மோடி பல ஆண்டுகளால அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கிறார். மண்ணுமோஹன் ஆட்சியில் இருநூறை தாண்டிய பருப்பு விலை தற்போது நூறு ரூபாய்க்குள் நிலைகொண்டுள்ளது. காய்கறிகளும் அவ்வாறே...
Rate this:
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
23-ஏப்-201911:15:25 IST Report Abuse
Ramalingam Krishnaswamyநாடு முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வரும்போது, விலைவாசி எவ்விதத்தில் குறையும் இத்தகு எண்ணமே ஒருவகையில் அறியாமை. குடும்பம் - மனைவி, குழந்தைகள் என்று விருத்தி அடையும்போது குடும்ப செலவு அதிகரித்துவிட்டது என்பது அறியாமை. அதுபோல்தான் இதுவும். வழிப்பிசைக்காரர்கள்கூட இப்போது ஐந்து ரூபாய்க்குக் குறைவாகக் கொடுத்தால் கொடுப்பவரைக் கேவலமாகப் பார்க்கும் காலம் இது....
Rate this:
ilitchavaya tamilan@naanum hinduthaan - erode,இந்தியா
23-ஏப்-201911:43:26 IST Report Abuse
ilitchavaya tamilan@naanum hinduthaanRamalingam Krishnaswamy - வழிப்பிசைக்காரர்கள்கூட இப்போது ஐந்து ரூபாய்க்குக் குறைவாகக் கொடுத்தால் கொடுப்பவரைக் கேவலமாகப் பார்க்கும் காலம் இது....அப்போ விலைவாசி உயர்ந்துதானே இருக்கிறது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X